Back to Top

QR Code செயற்படுத்தப்பட்ட கடனட்டைகளுக்கான கொடுப்பனவு வசதியை இலங்கையில் முதன்முறையாக அறிமுகப்படுத்துகின்றது கொமர்ஷல் வங்கி

QR Code செயற்படுத்தப்பட்ட கடனட்டைகளுக்கான கொடுப்பனவு வசதியை இலங்கையில் முதன்முறையாக அறிமுகப்படுத்துகின்றது கொமர்ஷல் வங்கி

August 1, 2020  11:30 am

Bookmark and Share
கொமர்ஷல் வங்கியின் கடனட்டைகளை வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் தமது கடனட்டைகளின் மிகுதித் தொகைகளைத் தற்போது அவர்களின் மொபைல் QR கொடுப்பனவுச் செயலி மூலமாக வங்கியின் வலைத்தளத்தில் காணப்படும் QR குறியீட்டை ஸ்கேன் செய்து உடனடியாகவே செலுத்தும் வசதி இப்போது ஏற்பட்டுள்ளது.

கடனட்டைகளுக்கான மீதிகளைச் செலுத்துவதற்காக QR குறியீடு மூலமான கொடுப்பனவு வசதியை இலங்கையைச் சேர்ந்த வங்கியொன்று அறிமுகப்படுத்துவது இதுவே முதற்தடவையாகும்.

கொடுப்பனவை மேற்கொள்வதற்குக் கடனட்டையைக் கொண்டிருக்கும் வாடிக்கையாளர் www.combank.lk என்ற வலைத்தள முகவரிக்குச் சென்று ‘Credit Card Payments’ என்ற பகுதியை அழுத்த வேண்டும். அங்கு கடனட்டை விவரங்களைப் பதிந்த பின்னர் ‘Pay through QR’ என்ற தெரிவை மேற்கொண்டு தமது கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.

திரையில் தோன்றும் இயக்கநிலை QR (dynamic QR) குறியீடானது LANKAQR நியமங்களுக்கேற்ப இலங்கையில் உருவாக்கப்பட்ட QR அடிப்படையிலான முதலாவது செயலியான ComBank Q+ செயலி LANKAQR நியமங்களுக்கு இயைபான வேறு எந்த ஞசு கொடுப்பனவுச் செயலி அல்லது மாஸ்டர்கார்ட் QR அல்லது ஏனைய QR ஆதரவளிக்கப்பட்ட எந்தச் செயலி மூலமாகவும் ஸ்கேன் செய்ய முடியும்.

கொமர்ஷல் வங்கி அண்மையில் Q+ கொடுப்பனவுச் செயலியின் பாவனையாளர்களுக்கும் வணிகர்களுக்குமான செயலிகளை biometric மூலமான உள்நுழைவு வணிக நிறுவனங்களைத் தாமாகவே பதிவுசெய்தல் உள்ளிட்ட புதிய வசதிகளுடன் இற்றைப்படுத்தியிருந்தது.

கொமர்ஷல் வங்கியின் கடனட்டைகளுக்கான கொடுப்பனவுகளை மேற்கொள்வதற்கு மேலதிகமாக புத்தக நிலையங்கள் கோப்பி அருந்தும் உணவகங்கள் உணவகங்கள் ஃபஷன் விற்பனை நிலையங்கள் பூ விற்பனை நிலையங்கள் பலசரக்கு விற்பனையகங்கள் சுப்பர் மார்க்கெட்டுகள் தகவல் தொழில்நுட்ப விற்பனை நிலையங்கள்ரூபவ் சலவைச் சேவைகள் தங்குமிடங்கள் மருந்தகங்களும் வைத்தியசாலைகளும் புகைப்பட நிலையங்கள் அழககங்கள் (salon) என்று Q+ செயலியை ஏற்கும் 500க்கும் மேற்பட்ட விற்பனை நிலையங்கள் நாடு முழுவதிலும் காணப்படுகின்றன.

கொமர்ஷல் வங்கியின் கடனட்டைகளுக்கான QR கொடுப்பனவுகள் ஏனைய LANKAQR உறுப்பு நிறுவனங்களான இலங்கை வங்கி கார்கில்ஸ் வங்கி DFCC வங்கி LOLC நிதி நிறுவனம் தேசிய சேமிப்பு வங்கி சம்பத் வங்கி நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி உள்ளிட்டவற்றின் QR கொடுப்பனவுச் செயலிகள் மூலமாகவும் மேற்கொள்ளப்பட முடியும்.

உலகின் ஆயிரம் தலைசிறந்த வங்கிகளில் ஒன்றாகப் பட்டியலிடப்பட்டுள்ள இலங்கையின் ஒரே வங்கியான கொமர்ஷல் வங்கி தொடர்ந்து பத்து வருடங்களாக அந்தப் பட்டியலில் இடம்பிடித்துள்ளது. இவ்வாண்டு வங்கி அதன் 100 வது அண்டு நிறைவைக் கொண்டாடுகின்றது. 2019ல் 50க்கும் மேற்பட்ட சர்வதேச மற்றும் உள்ளுர் விருதுகளை வென்றுள்ள கொமர்ஷல் வங்கி இலங்கையில் 268 கிளைகளுடனும் 873 ATM வலையமைப்புடனும் செயற்படுகின்றது.

கொமர்ஷல் வங்கியின் வெளிநாட்டுச் செயற்பாடுகள் பங்களாதேஷில் 19 கிளைகளைக் கொண்டதாகவும் மியன்மாரில் யங்கூனில் பிரதிநிதிகள் அலுவலக செயற்பாடுகளைக் கொண்டதாகவும் நேய்பியுடோவில் நுண் நிதிக் கம்பனி ஒன்றைக் கொண்டதாகவும் காணப்படுகின்றது. மாலைதீவில் முதல் வரிசை வங்கியொன்றை அதிகபட்ச பங்குரிமையோடு முழு அளவில் வங்கி திறந்துள்ளது.

Most Viewed