Back to Top

 கடற்படைத் தளபதியை சந்தித்த அவுஸ்திரேலியா  உயர் ஸ்தானிகர்

கடற்படைத் தளபதியை சந்தித்த அவுஸ்திரேலியா உயர் ஸ்தானிகர்

August 1, 2020  05:56 pm

Bookmark and Share
இலங்கைக்கான அவுஸ்திரேலியா உயர் ஸ்தானிகர் டேவிட் ஹோலி நேற்று கடற்படைத் தலைமையகத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவை சந்தித்தார்.

இலங்கை கடற்படையின் 24 வது தளபதியாக நியமிக்கப்பட்ட வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவுக்கு அவுஸ்திரேலியா உயர் ஸ்தானிகர் டேவிட் ஹோலி தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

இந்த சந்திப்பின் போது, அவுஸ்திரேலியா உயர் ஸ்தானிகரும் கடற்படைத் தளபதியும் பரஸ்பர நலன்களைப் பற்றிய கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.

இதற்கிடையில், இலங்கை கடற்படையின் 24 வது தளபதியாக நியமிக்கப்பட்டமைக்கு வாழ்த்துக்களை தெரிவித்த ராயல் அவுஸ்திரேலியா கடற்படை தளபதியின் மற்றும் அவுஸ்திரேலியா அரசாங்கத்தின் இறையாண்மை எல்லை செயல்பாடுகள் குறித்த ஒருங்கிணைந்த பணிக்குழுவின் கட்டளை அதிகாரியின் வாழ்த்துச் செய்திகளை இங்கு உயர் ஸ்தானிகர் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவுக்கு வழங்கினார். இந்நிகழ்வில் கொழும்பு அவுஸ்திரேலியா உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் குரூப் கேப்டன் சோன் அன்வின் அவர்களும் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில் கடற்படைத் தளபதி மற்றும் அவுஸ்திரேலியா உயர் ஸ்தானிகர் டேவிட் ஹோலி ஆகியோருக்கு இடையே நினைவுச் சின்னங்களை பரிமாறிக் கொள்ளப்பட்டன.

Most Viewed