Back to Top

துறைமுக பணி புறக்கணிப்பு நிறைவுக்கு வந்தது

துறைமுக பணி புறக்கணிப்பு நிறைவுக்கு வந்தது

August 2, 2020  01:57 pm

Bookmark and Share
கொழும்பு கிழக்கு முனைய செயல்பாடுகளை வெளிநாட்டிற்கு ஒப்படைக்கக் கூடாது என்று கோரி மேற்கொள்ளப்பட்டு வந்த பணி புறக்கணிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் கால்டன் இல்லத்தில் இன்று (02) நடைபெற்ற பேச்சுவார்தையின் அடுத்து குறித்த தொழிற்சங்க நடவடிக்கை நிறைவுக்கு கொண்டுவரப்படுவதாக துறைமுக தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

துறைமுக கிழக்கு முனையத்தின் செயல்பாடு தொடர்பான பிரச்சினை தொடர்பாக மொத்தம் 23 துறைமுக தொழிற்சங்கங்கள் கடந்த வெள்ளிக்கிழமை முதல் தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.