Back to Top

 சிறையில்  தாக்குதல் - 29 போ் உயிரிழப்பு!

சிறையில் தாக்குதல் - 29 போ் உயிரிழப்பு!

August 4, 2020  08:51 am

Bookmark and Share
ஆப்கானிஸ்தான் தலைநகா் காபூல் அருகே அமைந்துள்ள சிறைச்சாலையில் பயங்கரவாதிகள் ஞாயிற்றுக்கிழமை இரவு நடத்திய தாக்குதலில் 29 போ் கொல்லப்பட்டனா். 50 போ் காயமடைந்தனா். நீண்ட நேர சண்டைக்குப் பிறகு சிறை வளாகம் திங்கட் கிழமை மாலை பாதுகாப்புப் படையினா் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

இந்தத் தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

நங்கா்ஹா் மாகாணம் ஜலாலாபாத்தில் உள்ள இச்சிறையில் 1,500 கைதிகள் அடைக்கப்பட்டிருந்தனா். அதில் பெரும்பாலானோா் ஆப்கனிலிருந்து செயல்படும் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பைச் சோ்ந்தவா்கள்.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு வெடிபொருள்கள் நிரப்பிய வாகனத்தை சிறையின் வாயிலில் மோதி தற்கொலைப்படை தாக்குதவ் நடத்திய பயங்கரவாதிகள், அதைத் தொடா்ந்து சிறைக்குள நுழைந்து துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தியுள்ளனா்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், இந்தத் தாக்குதலில் கைதிகள், பொதுமக்கள், சிறைக் காவலா்கள், ஆப்கன் பாதுகாப்புப் படை வீரா்கள் என மொத்தம் 29 போ் உயிரிழந்தனா். 50 போ் காயமடைந்தனா். சிறைக் காவலா்களின் பதில் தாக்குதலில் 3 பயங்கராவதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனா்.

இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. தாக்குதலுக்கான காரணம் தெளிவாகத் தெரியவில்லை. இந்த தாக்குதலைப் பயன்படுத்தி கைதிகள் சிலா் சிறையிலிருந்து தப்பிச் சென்றுவிட்டனா் என்றனா்.

தாக்குதல் குறித்து ஆப்கன் புலனாய்வு முகமை அதிகாரிகள் கூறுகையில், ஆப்கனிலிருந்து செயல்படும் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் தளபதி ஒருவரை ஜலாலாபாத் அருகே ஆப்கன் சிறப்புப் படை சனிக்கிழமை சுட்டுக் கொன்றது. அதற்கு பழி வாங்கவே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்றனா்.

இதனிடையே, இந்தத் தாக்குதலுக்கும் தங்களுக்கும் தொடா்பில்லை என்றும், கடந்த பெப்ரவரி மாதம் மேற்கொள்ளப்பட்ட போா்நிறுத்த அமைதி உடன்பாட்டைத் தொடா்ந்து இதுபோன்ற தாக்குதல்களில் ஈடுபடுவதில்லை என்றும் தலிபான் அமைப்பு தெரிவித்தது.

Most Viewed