Back to Top

பொதுத் தேர்தல் 2020  - இறுதி தேர்தல் முடிவு  வரை வழங்குவதற்கு தெரண ஊடக வலையமைப்பு தயாராக உள்ளது

பொதுத் தேர்தல் 2020 - இறுதி தேர்தல் முடிவு வரை வழங்குவதற்கு தெரண ஊடக வலையமைப்பு தயாராக உள்ளது

August 4, 2020  09:21 pm

Bookmark and Share
2020 பொதுத் தேர்தலுடன் தொடர்புடைய அனைத்து தகவல்களையும் தொலைக்காட்சி, வானொலி, கைப்பேசி மற்றும் இணையத்தளம் உள்ளிட்ட அதிகமான ஊடகங்களின் ஊடாக உங்களுக்கு கொண்டு வருவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தெரண ஊடகம் ​செய்துள்ளது.

"அத தெரண தேர்தல் சிறப்பு நேரலை ஔிபரப்பு" ஊடாக நாளை (05) காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு ஆரம்பமாகும் நேரம் முதல் இறுதி முடிவுகள் வரை அனைத்து தகவல்களையும் வழங்குவதற்கு நாம் தயாராக உள்ளோம்.

அதன்படி, நாளை காலை 6.30 மணிக்கு ஆரம்பமாகும் "தெரண அருண" நிகழ்ச்சியில் இருந்து இறுதி தேர்தல் முடிவு வரை நேரடியாக அனைத்து தகவல்களும் தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளின் ஊடாகவும் வழங்கப்படவுள்ளது.

அதேபோல், "டயலொக்" மற்றும் "பியோ டீவி அலைவரிசை இலக்கம் 14" ஊடாகவும் " அத தெரண 24" அலைவரிசை ஊடாகவும் பொதுத் தேர்தல் தகவல்களை வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

அதேபோல், எப்.எம் 92.2, 92.4 ஊடாக எப்.எம் தெரண வானொலி ஊடாகவும் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

எமது இணையத்தளமான ´Tamil.adaderana.lk´ ஊடாக நாளின் 24 மணித்தியாலங்களும் மூன்று மொழிகளிலும் பேஸ்புக், யூ டியூப் மற்றும் டுவிட்டர் சமூக வலைத்தளங்கள் ஊடாக தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் வழங்குவதற்கு "அத தெரண" தயாராக உள்ளது.

Most Viewed