Back to Top

SRI LANKA DECIDES விஷேட நேரலை ஆரம்பம்

SRI LANKA DECIDES விஷேட நேரலை ஆரம்பம்

August 5, 2020  08:20 am

Bookmark and Share
2020 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கான வாக்கெடுப்பு தற்போது ஆரம்பமாகியுள்ளது.

மக்கள் ஆர்வமாக வாக்களிப்பதை காணக்கூடியதாக இருக்கின்றது.

அதனடிப்படையில் 2020 பொதுத் தேர்தலுடன் தொடர்புடைய அனைத்து தகவல்களையும் தொலைக்காட்சி, வானொலி, கைப்பேசி மற்றும் இணையத்தளம் உள்ளிட்ட அதிகமான ஊடகங்களின் ஊடாக உங்களுக்கு கொண்டு வருவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தெரண ஊடகம் ​செய்துள்ளது.

அத தெரண தேர்தல் சிறப்பு நேரலை ஔிபரப்பு நிகழ்ச்சியான ´SRI LANKA DECIDES´ தற்போது ஆரம்பமாகியுள்ளது.

இறுதி தேர்தல் முடிவு வரை நேரடியாக அனைத்து தகவல்களும் தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளின் ஊடாகவும் வழங்கப்படவுள்ளது.

அதேபோல், "டயலொக்" மற்றும் "பியோ டீவி அலைவரிசை இலக்கம் 14" ஊடாகவும் " அத தெரண 24" அலைவரிசை ஊடாகவும் பொதுத் தேர்தல் தகவல்களை வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

அதேபோல், எப்.எம் 92.2, 92.4 ஊடாக எப்.எம் தெரண வானொலி ஊடாகவும் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

எமது இணையத்தளமான Tamil.adaderana.lk ஊடாக நாளின் 24 மணித்தியாலங்களும் மூன்று மொழிகளிலும் பேஸ்புக், யூ டியூப் மற்றும் டுவிட்டர் சமூக வலைத்தளங்கள் ஊடாக தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் வழங்குவதற்கு "அத தெரண" தயாராக உள்ளது.