Back to Top

05 மணித்தியாலங்களில் 421 தேர்தல் முறைப்பாடுகள் பதிவு

05 மணித்தியாலங்களில் 421 தேர்தல் முறைப்பாடுகள் பதிவு

August 5, 2020  06:35 pm

Bookmark and Share
தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் இதுவரையில் எட்டாயிரத்திற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன் அடிப்படையில் இதுவரையில் 8025 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும் ஒரு வன்முறை செயல் கூட இதுவரை பதிவாகவில்லை என தேர்தல் ஆணைக்குழு வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, இன்று (05) காலை 06 மணி முதல் முற்பகல் 11 மணி வரையான காலப்பகுதியில் 421 தேர்தல் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.