Back to Top

  நாடுகள் சுயநலம் காட்டினால் கொரோனாவை வீழ்த்த முடியாது!

நாடுகள் சுயநலம் காட்டினால் கொரோனாவை வீழ்த்த முடியாது!

August 9, 2020  08:57 am

Bookmark and Share
கொரோனா தடுப்பு மருந்தைப் பெறுவதில் உலக நாடுகள் சுயநலம் காட்டினால், அந்த நோய்த்தொற்றை வீழ்த்த முடியாது என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

இதுகுறித்து, ஸ்விட்சா்லாந்தின் ஜெனீவா நகரில் அமைந்துள்ள அந்த அமைப்பின் தலைமையகத்தில், காணொலி காட்சி மூலம் அதன் தலைவா் டெட்ரோஸ் அதனோம் கூறியதாவது:

கொரோனா தடுப்பு மருந்து விவகாரத்தில் தேசியவாதத்தைக் காட்டுவது மிகவும் தவறானதாகும். அத்தகைய சுயநலத்தால் யாருக்கும் நன்மை ஏற்படாது. கொரோனா நோய்த்தொற்றின் பிடியிலிருந்து உலகம் விரைவாக விடுபட வேண்டும் என்றால், அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து போராட வேண்டும். காரணம், இது உலகமய காலக்கட்டம். தற்போதெல்லாம் அனைத்து நாடுகளின் பொருளாதாரமும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்துள்ளது.இத்தகைய சூழலில், உலகின் மற்ற நாடுகளில் கொரோனா நோய்த்தொற்று பரவிக் கொண்டிருந்தாலும், தங்கள் நாட்டுக்கு மட்டும் கொரோனாவில் இருந்து பாதுகாப்பு பெற்றுவிடலாம் என்று நினைப்பது மிகவும் தவறு என்றாா் அவா்.

இன்று காலை நிலவரப்படி, உலகம் முழுவதும் 19,804,408 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. அவா்களில் 729,586 போ் அந்த நோய்க்கு பலியாகியுள்ளனா்.