Back to Top

 சுசாந்த் சிங்குடன் 145 முறை மட்டுமே - ரியா அதிரடி அறிவிப்பு

சுசாந்த் சிங்குடன் 145 முறை மட்டுமே - ரியா அதிரடி அறிவிப்பு

August 9, 2020  09:23 am

Bookmark and Share
நடிகர் சுசாந்த் சிங்குடன் அவருடைய காதலி ரியா கடந்த ஒரு வருடத்தில் 145 முறை மட்டுமே தொலைபேசியில் பேசியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கிரிக்கெட் வீரா் எம்.எஸ்.தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் தோனி வேடத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான இளம் பாலிவுட் நடிகா் சுசாந்த் சிங் ராஜ்புத் (34), கடந்த ஜூன் மாதம் 14-ம் தேதி மும்பை பாந்த்ராவில் உள்ள தனது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டாா். அவரது மரணம் நாடு முழுவதும் அதிா்ச்சியை ஏற்படுத்தியது. மன அழுத்தம் காரணமாக அவா் தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டது. இதுதொடா்பாக மும்பை காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

சுசாந்த் சிங்கின் தந்தை கிருஷ்ண குமாா் சிங் (74) நடிகை ரியா மற்றும் அவரது குடும்பத்தினா் மீது சுசாந்தை தற்கொலைக்குத் தூண்டியதாகப் புகாா் அளித்திருந்தாா். கடந்த ஆண்டு மே மாதம் தனது மகனுடனான உறவை ரியா துண்டித்து விட்டதாகவும் அவா் கூறியிருந்தாா். சுசாந்த் சிங்கின் மரணம் தொடா்பாக அவரது காதலியும், நடிகையுமான ரியா மற்றும் சிலா் மீது பிகாா் காவல்துறையினர் பணமோசடி குற்றச்சாட்டின் கீழ், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தனா்

சுசாந்த் சிங் ராஜ்புத் மரணம் தொடா்பான வழக்கு விசாரணையை சிபிஐக்குப் பரிந்துரைக்க முடிவு செய்துள்ளதாக பிகாா் முதல்வா் நிதீஷ் குமாா் தெரிவித்தாா். சிபிஐக்குப் பரிந்துரைக்க பிகார் அரசு முடிவு செய்ததை ஏற்றுக்கொள்வதாக மத்திய அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுசாந்த் சிங் காதலி ரியா மற்றும் அவருடைய குடும்ப உறுப்பினர்கள் மீது முதல் தகவல் அறிக்கையை சிபிஐ பதிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பிகார் காவல்துறை 6 பிரிவுகள் ரியா மீது வழக்குப்பதிவு செய்தது. அதன் அடிப்படையில் இந்த நடவடிக்கையை சிபிஐ மேற்கொண்டுள்ளது. சிபிஐயின் சிறப்புப் புலனாய்வுக் குழு இந்த வழக்கை விசாரிக்கவுள்ளது.

இந்நிலையில் நடிகை ரியாவின் கடந்த ஒரு வருட தொலைப்பேசி அழைப்புகள் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன. கடந்த ஒரு வருடத்தில் தனது தந்தை இந்திரஜித்துடன் 1192 முறையும் சகோதரர் ஷோவிக்குடன் 1069 முறையும் பேசியுள்ளார்.

கடந்த ஒரு வருடத்தில் தனது காதலர் சுசாந்த் சிங்குடன் 145 முறை மட்டுமே பேசியுள்ளார். சுசாந்த் வீட்டின் மேலாளர் சாமுவேல் மிராண்டாவுடன் 287 முறை பேசியுள்ளார்.

பாலிவுட் பிரபலங்களில் இயக்குநர் மகேஷ் பட்டுடன் 16 முறையும் நடிகர் ஆதித்ய ராய் கபூருடன் 22 முறையும் பேசியுள்ளார். சுசாந்தின் வணிக மேலாளர் ஸ்ருதி மோடியுடன் 791 முறை பேசியுள்ளார். சுசாந்தின் நண்பர்கள் சித்தார்த் பிதானி (100 முறை), தீபேஷ் சாவந்த் (41 முறை) ஆகியோருடன் பலமுறை பேசியுள்ளார்.

மும்பைக் காவல்துறையின் இணை ஆணையர் அபிஷேக்குடன் 4 முறை ரியா பேசியுள்ளார். ஒருமுறை குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். அந்த நான்கு அழைப்புகளில் ஒருமுறை ரியாவைக் காவல் நிலையத்துக்கு வரவைப்பதற்காக அபிஷேக் பேசியுள்ளார். மற்றொரு முறை சமூகவலைத்தளங்களில் தனக்கு விடுக்கப்படும் அச்சுறுத்தல் குறித்து ரியா புகார் அளித்துள்ளார்.

Most Viewed