Back to Top

இருவேறு விபத்துக்களில் இருவர் பலி

இருவேறு விபத்துக்களில் இருவர் பலி

August 9, 2020  10:09 am

Bookmark and Share
வாரியபொல - குருணாகல் வீதியின் மஹகெலிய பகுதியில் இடம்பெற்ற விபத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிள் ஒன்று வேன் ஒன்றுடன் நேருக்கு நேர் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தில் பாதெனிய பகுதியை சேர்ந்த 49 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இதேவேளை மட்டக்களப்பு - பொலன்னறுவ வீதியின் நாமல்கம பகுதியில் டிரக்டர் ஒன்று மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதியதில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் 24 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

Most Viewed