Back to Top

மேர்வின் சில்வாவின் மகனுக்கு பிணை

மேர்வின் சில்வாவின் மகனுக்கு பிணை

August 12, 2020  01:54 pm

Bookmark and Share
கைது செய்யப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மேர்வின் சில்வாவின் மகன் மாலக சில்வா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

நேற்றிரவு (11) மாலக சில்வா தலங்கம பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

தலங்கம பிரதேசத்தில் வர்த்தகர் ஒருவருக்கு மரண அச்சுறுத்தல் விடுத்து 2 இலட்சம் ரூபாய் பணத்தை பெற முயன்ற சம்பவம் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் கடந்த ஜூலை மாதம் 16 ஆம் திகதி தலங்கம பொலிஸில் முறைப்பாடு கிடைக்கப்பெற்ற நிலையில், சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் பின்னர் நேற்றிரவு (11) 8.40 மணியளவில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று (12) கடுவலை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.