Back to Top

Kelsey Homes இன் URBAN HEIGHTS Wattala - நீங்கள் குடியமர்வதற்கு தயார் நிலையில்

Kelsey Homes இன் URBAN HEIGHTS Wattala - நீங்கள் குடியமர்வதற்கு தயார் நிலையில்

August 12, 2020  02:08 pm

Bookmark and Share
இலங்கையில் முன்னணி வகிக்கும் வீட்டுமனையாளர்களான Kelsey Homes, தகுந்த கொள்வனவாளர்களை தமது புதிய URBAN HEIGHTS Wattala க்கு ஆகஸ்ட் 15 மற்றும் 16ஆம் திகதிகளில் வருகை தந்து பார்வையிட வரவேற்கிறது. நீங்கள் தகுந்த கொள்வனவாளர் எனின் இவ்வீட்டு மனைத் தொகுதி உங்களுக்குக் குடியமர்வதற்கு தயார் நிலையில் உள்ளது.

URBAN HEIGHTS Wattala

நல்ல இடவசதிகளுடன் 16 வீடுகளைக் கொண்ட ஐந்து அடுக்கு மாடி குடியிருப்பாகும். இது பிரத்தியேகமான நுழைவாயிலைக் கொண்டிருப்பதால் பாதுகாப்பானதும் ஆகும். இது உயர் தர வரிசையில் அழகாக வடிவமைக்கப்பட்ட 2 மற்றும் 3 படுக்கையறைகளைக் கொண்டதான அலகுகளை உள்ளடக்கியுள்ளது. இவ்வலகுகள் உங்கள் பணத்துக்கு உகந்த பெறுமதியினை வழங்குவதுடன் குடியிருப்பாளர்களுக்கு 2022 ஆம் ஆண்டளவில் 30 நிமிடங்களில் கொழும்பு / போர்ட் சிடியினை அணுகிட முடியும். துறைமுக அணுகல் உயர் நெடுஞ்சாலை வழியாகவும் புற வட்ட நெடுஞ்சாலை வழியாகவும் குறுகிய நேரத்தினுள் இலகுவாக கொழும்பை அணுகிட முடியும்.

URBAN HEIGHTS Wattala குடியிருப்பாளர்களுக்கு வசதியானதும் சௌகரியமானதுமான வாழ்க்கை முறையை வழங்குகிறது. இக்குடியிருப்பு தொகுதியின் வளாகத்தில் பரந ;தளவிலான நவீன வசதிகள் காணப்படுகின்றன. அனைத்தும் உள்ளடக்கிய நவீன உடற்பயிற்சிக்கூடம், மொட்டை மாடியில் இருந்து பார்க்கையில் அழகிய கண்கவரும் காட்சிகளுடன் அழகிய கடலின் காட்சியையும் இரசித்திடலாம். அத்தோடு அனைத்து குடியிருப்பாளர்களுக்கும் லிஃப்ட், குப்பை சேகரிக்கும் இடம், மூடப்பட்ட வாகன தரிப்பிடம், 24 மணி நேர பாதுகாப்புச் சேவை போன்றவை காணப்படுகின்றன. இவை எல்லா நேரங்களிலும் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்கிறது. ஒவ்வெரு அலகும் 1200 + சதுர அடி பரப்பளவினைக் கொண்ட விசாலமான இடப்பரப்பினைக் கொண்டுள்ளது.

அத்தோடு இதன் விலை ரூ. 18.5 மில்லியன் ஆகும். COC (Certificate of conformity) சான்றிதழைப் பெற்றுக் கொண்டுள்ள நிலையில் புதிதாக கொள்வனவு செய்வோருக்கு உடனடியாக குடியிருக்கத்தக்க நிலையில் உள்ளது. இன்னும் ஏழு அலகுகளே எஞ்சியிருப்பதால் கொள்வனவாளர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட வாய்ப்பே இருக்கிறது. எனவே வத்தளைக்கு அண்டிய நகரப்பிரதேசத்தில் உங்கள் ஆபத்தற்ற முதலீட்டினை செய்திடுங்கள். 2020, ஆகஸ்ட் 31ஆம் திகதிக்கு முதல் முற்பதிவு செய்துகொள்ளும் சாத்தியமான கொள்வனவாளர்களுக்கு ரூ. 1 மில்லியன் விலைக்கழிவினை அனுபவித்திட முடியும்.

´ஒரு வீட்டை தேர்ந்தெடுத்திடும் போது மலிவு மற்றும் அணுகல் ஆகியவை கொள்வனவாளர்கள் கருத்திற்கொள்ள வேண்டிய மிக முக்கியமான காரணிகளாகும். இவையிரண்டும் URBAN HEIGHTS Wattala இனால் வழங்கப்படுகிறது. பிரத்தியேக நுழைவாயிலுடன் மேம்பட்ட வசதிகளைக் கொண்ட இந்த அடுக்குமாடி வீட்டுக்குடியிருப்பு மனையானது நிபுணர்களுக்கும் புகழ்பெற்ற வர்த்தகர்களுக்கும் மிகவும் உகந்தவையாக கண்டறியப்பட்டுள்ளது. நவீன அடுக்குமாடி குடியிருப்பின் அனைத்து வசதிகளுடன் இது முழுமை பெற்றுள்ளது. அதே வேளை ஒவ்வொரு அலகும் மிகச் சிறந்த உபகரணங்களையும் வசதிகளையும் கொண்டுள்ளது. போட்டிகரமான விலை மற்றும் ஏற்கனவே பெற்றுள்ள COC என்பவை, வாங்குபவர்கள் உடனடியாக குடியமர்வதற்குத் தயார் நிலையில் உள்ளது.´ என Kelsey Developments PLC யின் தலைவர் எர்ட்லி பெரேரா தெரிவித்தார்.

Kelsey Homes (Pvt) Ltd., ஆனது இலங்கையின் முதற்தர கட்டட நிர்மாணிப்பு நிறுவனமாகும். இது 200 க்கும் அதிகமான வீட்டு மனை, real estate திட்டங்களை தன்னகத்தேக் கொண்டதும் 2000+ க்கும் அதிகமான மனநிறைவு பெற்ற வாடிக்கையாளர்களையும் கொண்ட ஒரு தனித்துவமான நிறுவனமாகும். Kelsey Homes ஆனது Kelsey Developments PLC யின் உரிமம் பெற்ற ஒரு துணை நிறுவனமாகும். நிறுவனமான Kelsey Homes கட்டட நிர்மாணிப்புத் துறையின் ஒரு முன்னோடியாக பிரத்தியேக நிர்மாணிப்பு திட்டங்கள் மூலம் வாழ்வதற்கான தீர்வை பெற்று தருகிறது. 1983ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்நிறுவனம் வாக்குறுதிகளை நிறைவேற்றும் நன்மதிப்பைப் பெற்ற நிறுவனமாகும். தனது வாடிக்கையாளர்களுக்கு 24 மணிநேர பாதுகாப்பு வசதியுடன் கூடிய, அழகாக வடிவமைக்கப்பட்ட உயர்தரமான வீடுகளை நிர்மாணிப்பதற்கு தம்மை அர்ப்பணித்துள்ளது.

இதன் மிகவும் அண்மைக் கால திட்டங்களானவை: Templer’s Square, கல்கிசையில் 100 வீடுகளைக் கொண்ட சமூக வீடமைப்புத் திட்டம் என்பவை குறிப்பிடத்தக்கவை. 6 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டிருக்கும் நேர்த்தியான இவ்வீடுகள் அடுத்தடுத்த ஆண்டுகளில் மதிப்பையும் பெற்றுள்ளன. நிறுவனத்தின் நம்பிக்கைக்கும் உறுதிப்பாட்டிற்கும் சான்றாக அனைத்து வீடுகளும் 12 மாத குறைபாடுகள் பொறுப்புக் காலத்தினையும் உள்ளடக்கியுள்ளது.