Back to Top

தனது கட்டமைப்பினுள் spam களுக்கு எதிராக போராடும் புதிய உள்ளம்சங்களை Rakuten Viber அறிமுகம் செய்துள்ளது

தனது கட்டமைப்பினுள் spam களுக்கு எதிராக போராடும் புதிய உள்ளம்சங்களை Rakuten Viber அறிமுகம் செய்துள்ளது

August 12, 2020  02:20 pm

Bookmark and Share
உலகின் முன்னணி இலவச தொடர்பாடல் app ஆன Rakuten Viber, தனது கட்டமைப்பினுள் spam களுக்கு எதிராக போராடுவதற்காக புதிய உள்ளம்சங்களை அறிமுகம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது. பாவனையாளர் பிரத்தியேக நிலை உறுதி செய்தல், பெயரினால் பாவனையாளர்களை தேடலை கட்டுப்படுத்தல் போன்றவற்றுக்கு புதிய உள்ளம்சம் செயலாற்றும். Viber தனது பாவனையாளர்களின் பிரத்தியேக நிலைக்கான கடுமையான அர்ப்பணிப்பை உறுதி செய்யும் வகையில் புதிய தேடல் ஆற்றலை உருவாக்கியுள்ளது.

உலகம் மாறி வரும் நிலையில்ரூபவ் தகவல் பரிமாற்ற appகள் தொடர்பாடலில் முக்கியத்துவம் பெறும் நிலையில் மக்கள் தமது வலையமைப்புகளை விஸ்தரிப்பதற்கான மேலதிக வழிமுறைகளை தொடர்ச்சியாக நாடிய வண்ணமுள்ளனர். அத்துடன் முன்னரை விட தற்போது அதிகளவு தகவல்களால் மக்கள் நிரப்பப்படுகின்றனர். இந்நிலையில் spam மற்றும் அநாவசியமான தகவல்களை தவிர்த்துக் கொள்வது என்பது முக்கியமானது. இணைப்புகளை ஒன்லைனில் காண்பது என்பதில் சவால்கள் காணப்படுவது மாத்தரமன்றி அவற்றை பாதுகாப்பாகவும் பிரத்தியேகமாகவும் முன்னெடுப்பதிலும் சவால்கள் காணப்படுகின்றன. தமது புதிய பிரத்தியேக உள்ளம்சங்களுடன் இதற்கான தீர்வை Viber வழங்கியுள்ளது.

சமூகங்கள் மற்றும் குழுநிலை chat களுக்கு யாரை உள்வாங்கலாம் என்பதை கட்டுப்படுத்தும் வசதியை தற்போது Viber ஏற்படுத்தியுள்ளது. இதை செயற்படுத்திக் கொள்ள More > Settings > Privacy > Groups > என்பதில் குரூப்களில் யாரை உள்ளடக்கலாம் என்பதை கட்டுப்படுத்தலாம்.

மேலும் பரீட்சியமற்றவர்களிடமிருந்து புதிய சமூக மற்றும் குரூப் chat அழைப்புகள் புதிய Message Requests inbox இனுள் சுயமாக செல்லும். இதனூடாக பாவனையாளரின் பிரதான chat பகுதி அநாவசியமான தொந்தரவுகள் இன்றி சீராக காணப்படும்.

பாவனையாளர்களுக்கு Viber இல் நபர்களை தேடும் புதிய முறையினூடாகரூபவ் வலையமைப்புகளை விஸ்தரித்துக் கொள்ள வாய்ப்பு வழங்கப்படுவதுடன் தமது பிரத்தியேகத்தன்மையை உச்ச நிலையில் பேணிக் கொள்ளவும் உதவுகின்றது. Viber search bar இல் நபர் ஒருவரின் பெயரைத் தேடியதும் தேடல் பெறுபேறுகளில் புகைப்படத்துடன் அது தென்படும். புதிய விதிமுறையின் பிரகாரம் பின்வருவனவற்றை Viber உறுதி செய்துள்ளது:

● சகலரின் தொலைபேசி இலக்கங்கள் பகிரப்படும் வரை தென்படாது.
● ஒன்லைன் நிலை தென்படாது.
● குரல் மற்றும் வீடியோ அழைப்புகள் மேற்கொள்ள முடியாது.

தேடல் முறையினூடாக தம்மை இனங்காண விரும்பாத பாவனையாளர்கள் More > Settings > Privacy > இல் இந்த நிலையை தெரிவு செய்யலாம்.

Viber இன் பிரதம செயற்பாட்டு அதிகாரி ஒஃபிர் இயால் கருத்துத் தெரிவிக்கையில்ரூபவ் “Viber இல் People Search மற்றும் Message Requests inbox போன்றன முதலில் தெரிவு செய்யப்பட்ட நாடுகளில் பரிசோதிக்கப்படும். பாவனையாளர்களுக்கு தமது சமூக வட்டங்களை விஸ்தரித்துக் கொள்வது முக்கியமானதாகும். அதேவேளை தமது பிரத்தியேகத் தன்மையை பேணிக் கொள்ள வேண்டியதும் முக்கியமானதாகும். இதற்கான சிறந்த தீர்வைப் பெற்றுக் கொள்வதற்கு நாம் கடுமையாக உழைப்பதுடன் அதனூடாக எமது பாவனையாளர்களின் பாதுகாப்பு மற்றும் பிரத்தியேகத்தன்மையை மேம்படுத்தக்கூடியதாக இருக்கும்.´ என்றார்.