Back to Top

SLIM இன் முக்கியத்துவம் வாய்ந்த கூட்டாண்மை நிகழ்வுகளின் உத்தியோகபூர்வ அனுசரணையாளராக INSEE சீமெந்து இணைவு

SLIM இன் முக்கியத்துவம் வாய்ந்த கூட்டாண்மை நிகழ்வுகளின் உத்தியோகபூர்வ அனுசரணையாளராக INSEE சீமெந்து இணைவு

August 12, 2020  02:31 pm

Bookmark and Share
சந்தைப்படுத்தல் துறைக்கான இலங்கையின் தேசிய கட்டமைப்பான இலங்கை சந்தைப்படுத்தல் கல்வியகத்தினால் (SLIM) முன்னெடுக்கப்படும் வருடாந்த கூட்டாண்மை நிகழ்வுகளுக்கு உத்தியோகபூர்வ அனுசரணைகளைப் பெற்றுக் கொடுக்க INSEE சீமெந்து முன்வந்துள்ளது. மூன்றாண்டு காலத்துக்கு அமுலில் இருக்கும் வகையில் இந்த அனுசரணை உடன்படிக்கையில் இரு தரப்பும் கைச்சாத்திட்டுள்ளன.

SLIM உடன் கடந்த காலங்களில் உறுதியான மற்றும் வெற்றிகரமான பங்காண்மையை ஏற்படுத்தியிருந்த INSEE சீமெந்து சந்தைப்படுத்தலில் காணப்படும் சிறந்த செயன்முறைகளை கல்வியகம் மெருகேற்றும் நிலையில் கூட்டாண்மை பயிற்சிகள் மற்றும் நிகழ்ச்சிகளுக்கு அனுசரணை வழங்குவதனூடாக கல்வியகத்துக்கு மேலும் வலுவூட்டுவதாக அமைந்துள்ளது.

2020 ஜுலை 29ஆம் திகதி சந்தைப்படுத்தல் கல்வியகத்தின் தலைவர் ரொஷான் பெர்னான்டோ மற்றும் INSEE சீமெந்தின் விற்பனை சந்தைப்படுத்தல் மற்றும் புத்தாக்கம் ஆகியவற்றுக்கான நிறைவேற்று உப தலைவர் ஜான் குனிக் இந்த அனுசரணையில் கைச்சாத்திடப்பட்டதுடன்ரூபவ் SLIM இனால் ஏற்பாடு செய்யப்படும் மக்கள் விருதுகள் வர்த்தக நாமச் சிறப்பு விருதுகள் டிஜி விருதுகள் மற்றும் தேசிய விற்பனை காங்கிரஸ் விருதுகள் போன்ற நிகழ்வுகளுக்கு INSEE சீமெந்து கூட்டாண்மை அனுசரணை வழங்கும்.

INSEE சீமெந்தின் விற்பனை சந்தைப்படுத்தல் மற்றும் புத்தாக்கம் ஆகியவற்றுக்கான நிறைவேற்று உப தலைவர் ஜான் குனிக் கருத்துத் தெரிவிக்கையில் ´நாட்டின் முன்னணி சீமெந்து உற்பத்தியாளர் எனும் வகையில்ரூபவ் INSEE சீமெந்து நாட்டின் நிர்மாணத்துறையில் புதிய புரட்சியை ஏற்படுத்துவதில் முன்னணியில் திகழ்கின்றது.

இதற்காக பிரதான பங்காளர் குழுக்களுக்கு வலுவூட்டுவதுடன் ஆற்றல் விருத்திக்கு உதவிகளைப் பெற்றுக் கொடுப்பது மற்றும் அறிவுப் பகிர்வு மற்றும் நிபுணத்துவப் பகிர்வுக்கு பங்களிப்பு வழங்கிய வண்ணமுள்ளது. இந்த பங்காண்மையினூடாக SLIM உடன் கைகோர்த்து துறையின் முன்னோடிகளுடன் அறிவு பகிர்வு நிபுணத்துவப் பகிர்வு ஆகியவற்றை ஊக்குவிக்க எதிர்பார்ப்பதுடன் வர்த்தக நாமச் சிறப்பு விருதுகள்ரூபவ் டிஜி விருதுகள் மற்றும் தேசிய விற்பனை காங்கிரஸ் விருதுகள் போன்றவற்றில் தமது பெறுமதி வாய்ந்த சேவைகளை வெளிப்படுத்தவும் எதிர்பார்த்துள்ளது.´ என்றார்.