Back to Top

கொமர்ஷல் வங்கியின் இல்லத்திற்கு பரிசு - 3 பண அனுப்பீட்டு ஊக்குவிப்பு வெற்றியாளர் விவரம் வெளியிடப்பட்டது

கொமர்ஷல் வங்கியின் இல்லத்திற்கு பரிசு - 3 பண அனுப்பீட்டு ஊக்குவிப்பு வெற்றியாளர் விவரம் வெளியிடப்பட்டது

August 12, 2020  02:42 pm

Bookmark and Share
கொமர்ஷல் வங்கியின் 2019ஆம் ஆண்டுக்கான இல்லத்திற்கு பரிசு 3 (Gedarata Thégi 3) பண அனுப்பீட்டு (remittance) ஊக்குவிப்புத் திட்டத்தை நிறைவு செய்யும் விதமாக Hyundai Grand i10 காரொன்று மூன்று ஸ்கூட்டர்கள் ஏனைய பரிசுகள் போன்றவற்றுக்கான வெற்றியாளர்களை அடையாளங் காணும் மிகப்பெரிய குலுக்கல் நிகழ்வு அண்மையில் நடைபெற்றிருந்தது.

பிரமாண்டமான பரிசுகளை வெற்றிகொண்டோரை விட 10 ஸ்மார்ட் தொலைக்காட்சிகள் 10 சமையலறைக் கருவித் தொகுதிகள் 10 சலவை இயந்திரங்கள் ஆகியவற்றுக்கான வெற்றியாளர்களும் அறிவிக்கப்பட்டனர். மேலதிகமாக மூன்று காலாண்டுக் குலுக்கல்களில் தெரிவுசெய்யப்பட்ட 75 வெற்றியாளர்கள் 15,000 ரூபாய் மதிப்பிலான பரிசுப் பொதிகளையும் இத்திட்டத்தின் கீழ் பெற்றுக்கொண்டனர்.

கொவிட்-19 காரணமாக ஏற்படுத்தப்பட்டுள்ள சமூக இடைவெளி பேணல் நடவடிக்கைகள் காரணமாக 10 வெற்றியாளர்கள் மாத்திரம் கலந்துகொண்ட நிகழ்வாக இது நடைபெற்றது என வங்கி தெரிவித்தது. கொமர்ஷல் வங்கியின் சொந்த பணப்பரிமாற்றச் சேவையான e Exchange சேவை அதேபோல் MoneyGram, Western Union, Ria ஆகியன மூலம் 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 1 முதல் டிசெம்பர் 31 வரை பணத்தைப் பெற்றுக்கொண்டவர்கள் பிரமாண்டமான குலுக்கலுக்கும் காலாண்டுக்கான குலுக்கல்களுக்கும் தகுதிபெற்றிருந்தனர்.

கொமர்ஷல் வங்கியின் இல்லத்திற்கு பரிசு பிரமாண்டப் பரிசை வென்றவர் வங்கியின் முகாமைத்துவப் பணிப்பாளர் திரு. எஸ். ரெங்கநாதன் பிரதம செயற்பாட்டு அதிகாரி திரு. சனத் மனதுங்க (முறையே மேலே நடுவில் வலமிருந்து மூன்றாவதாக) வங்கியின் சிரேஷ்ட கூட்டாண்மை முகாமைத்துவத்தைச் சேர்ந்த அதிகாரிகள் (கீழே) ஏனைய பரிசு வெற்றியாளர்களில் சிலர் வங்கியின் பிரதிநிதிகளோடும் புகைப்படத்தில் காணப்படுகின்றனர்.