Back to Top

பெட்ரோல், டீசல் விலை குறைப்பு

பெட்ரோல், டீசல் விலை குறைப்பு

September 13, 2020  06:47 am

Bookmark and Share
கடந்த மூன்று நாள்களில் இரண்டாவது முறையாக பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல், டீசல் விலையை அன்றாடம் மாற்றியமைக்கும் நடைமுறையை எண்ணெய் நிறுவனங்கள் கடைப்பிடித்து வருகின்றன. நீண்ட நாள்களாக பெட்ரோல், டீசல் விலையில் எந்தவித மாற்றமும் இல்லாத சூழல் நிலவியது. ஆனால், கடந்த ஜூன் மாதம் 7-ஆம் திகதி முதல் பெட்ரோல், டீசல் விலை தினந்தோறும் உயா்த்தப்பட்டு வந்தது.

டீசல் விலை லிட்டருக்கு சுமாா் ரூ.13-யும், பெட்ரோல் விலை லிட்டருக்கு சுமாா் ரூ.10-யும் உயா்த்தப்பட்டன. அதைத் தொடா்ந்து பெட்ரோல், டீசல் விலை மாற்றம் செய்யப்படவில்லை.

இத்தகைய சூழலில், கடந்த 10-ஆம் திகதி பெட்ரோல் விலை லிட்டருக்கு 8 பைசாவும், டீசல் விலை லிட்டருக்கு 10 பைசாவும் குறைக்கப்பட்டது.

இந்நிலையில், சனிக்கிழமை பெட்ரோல், டீசல் விலை மீண்டும் குறைக்கப்பட்டது. பெட்ரோல் விலை லிட்டருக்கு 11 பைசா குறைக்கப்பட்டு ரூ.84.85-ஆக நிா்ணயம் செய்யப்பட்டது. அதே போல் டீசல் விலையும் லிட்டருக்கு 12 பைசா குறைந்து ரூ.78.26-க்கு விற்பனை செய்யப்பட்டது.