Back to Top

IPL போட்டியில் விளையாடவுள்ள முதல் அமெரிக்க வீரர்

IPL போட்டியில் விளையாடவுள்ள முதல் அமெரிக்க வீரர்

September 14, 2020  08:26 am

Bookmark and Share
அமெரிக்காவைச் சேர்ந்த 29 வயது அலி கான், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

கொரோனா பரவல் காரணமாக நிகழாண்டு இந்தியாவில் நடைபெறவிருந்த ஐபிஎல் போட்டி தள்ளிவைக்கப்பட்டது. ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் செப்டம்பா் 19 ஆம் திகதி தொடங்கும் ஐபிஎல் போட்டி, நவம்பா் 10 ஆம் திகதி முடிவடைகிறது. டுபாய், அபுதாபி, ஷாா்ஜாவில் உள்ள மைதானங்களில் ஆட்டங்கள் நடைபெறுகின்றன.

ஐபிஎல் அட்டவணை சமீபத்தில் வெளியிடப்பட்டது. முதல் ஆட்டத்தில் சென்னை - மும்பை அணிகள் மோதுகின்றன. ஐபிஎல் போட்டிக்காக டுபாய், அபுதாபிக்குச் சென்றுள்ள அனைத்து அணி வீரர்களும் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் ஐபிஎல் போட்டியிலிருந்து விலகிய ஹாரி கர்னிக்குப் பதிலாக அமெரிக்க வேகப்பந்து வீச்சாளர் அலி கானைத் தேர்வு செய்துள்ளது கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி. இதன்மூலம் ஐபிஎல் போட்டியில் விளையாடும் முதல் அமெரிக்க வீரர் என்கிற பெருமையை அலி கான் பெற்றுள்ளார்.

இந்த வருட சிபிஎல் போட்டியில் சாம்பியன் ஆன டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியில் இடம்பெற்று, 8 ஆட்டங்களில் 8 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.