Back to Top

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் காலமானார்!

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் காலமானார்!

September 16, 2020  08:30 am

Bookmark and Share
இந்திய முன்னாள் ஆல்ரவுண்டர் சதாசிவ் பாட்டீல் இன்று காலமாகியுள்ளார். அவருக்கு வயது 86.

தூக்கத்தில் சதாசிவ் பாட்டீலின் உயிர் பிரிந்ததாக கோலாபூர் கிரிக்கெட் சங்க நிர்வாகி ரமேஷ் கடம் தகவல் தெரிவித்துள்ளார். சதாசிவுக்கு மனைவி, இரு மகள்கள் உள்ளார்கள்.

1955 இல் நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்டில் விளையாடியுள்ளார் சதாசிவ். அந்த ஆட்டத்தில் 14 ஓட்டங்களும் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினார். அதன்பிறகு இந்திய அணியில் மீண்டும் விளையாடும் வாய்ப்பு அவருக்குக் கிடைக்கவில்லை.

மஹாராஷ்டிர அணிக்காக 36 முதல்தர ஆட்டங்களில் விளையாடி 866 ஓட்டங்களும் 83 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார். ரஞ்சி கிண்ணத்தில் மஹாராஷ்டிர அணியின் தலைவராக செயல்பட்டுள்ளார்.