Back to Top

இன்று மோதல் - தொடரை வெல்வது யார்?

இன்று மோதல் - தொடரை வெல்வது யார்?

September 16, 2020  10:07 am

Bookmark and Share
இங்கிலாந்துக்கு சென்றுள்ள அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. முதலாவது ஆட்டத்தில் அவுஸ்திரேலியாவும், 2 வது ஆட்டத்தில் இங்கிலாந்தும் வெற்றி பெற்றன.

இவ்விரு அணிகள் இடையிலான 3 வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி மான்செஸ்டரில் இன்று நடக்கிறது. இது தொடரை நிர்ணயிக்கும் ஆட்டம் என்பதால் பரபரப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பயிற்சியின் போது பந்து தலையில் தாக்கியதால் முன்னெச்சரிக்கையாக இரண்டு ஆட்டங்களில் ஓய்வு அளிக்கப்பட்டிருந்த அவுஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் சுமித் இன்றைய ஆட்டத்தில் களம் திரும்புவார் என்று தெரிகிறது. இன்று மாலை 5.30 மணிக்கு போட்டி ஆரம்பமாகும்.