Back to Top

விசேட அதிரடிப்படையினரால்   உள்ளூர் துப்பாக்கி மீட்பு

விசேட அதிரடிப்படையினரால் உள்ளூர் துப்பாக்கி மீட்பு

September 16, 2020  03:01 pm

Bookmark and Share
மட்டக்களப்பு, புதூர் பிரதேச்தில் உள்ள மீனவர் சங்க கட்டிட பகுதியில் கைவிடப்பட்டிருந்த உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கி ஒன்றை விசேட அதிரடிப்படையினர் மீட்டுள்ளனர்.

குறித்த துப்பாக்கியை நேற்று (15) இரவு விசேட அதிரடிப்படையினர் மீட்டு பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக மட்டு தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றினை அடுத்து வவுணதீவு விசேட அதிரடிப்படை பொறுப்பதிகாரி டபிள்யூ.ஜி.எஸ். கயபிரித்த தலைமையிலான விசேட அதிரடிப்படை குழுவினர் நேற்று இரவு குறித்த பகுதியை சுற்றிவளைத்து தேடுதல் நடத்தினர்.

இதன் போது குறித்த உள்ளூர் துப்பாக்கி மீட்கப்பட்டு, மட்டு. தலைமையக பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

-மட்டக்களப்பு நிருபர் சரவணன்-