Back to Top

'சஹஸ்புர சுஜிவா' என்ற பெண் கைது

'சஹஸ்புர சுஜிவா' என்ற பெண் கைது

September 27, 2020  08:38 pm

Bookmark and Share
ஹெரோயின் போதைப் பொருள் விற்பனையில் ஈடுப்பட்ட ´சஹஸ்புர சுஜிவா´ என்ற பெண் பொரளை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

பொரளை சஹஸ்புர பகுதியில் வைத்து பொரளை ஊழல் ஒழிப்பு பிரிவால் நடத்தப்பட்ட சுற்றி வளைப்பின் போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவரிடம் இருந்து 2 கிராம் 700 மில்லி கிராம் போதை பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

மைக்கல் அந்தோனி சுஜிவா எனப்படும் ´சஹஸ்புர சுஜிவா´ என்ற 37 வயதான அதே பகுதியில் வசிப்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, நேற்று காலை 6 மணி முதல் இன்று அதிகாலை 5 மணி வரை மேல் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட போதை பொருள் சுற்றி வளைப்பில் 484 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதில் ஹெரோயின் போதை பொருள் 328 கிராமும், 47 கிலோ கஞ்சா போதை பொருளும், 67 கிராம் பெறுமதியான ஐஸ் ரக போதை பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக மேல் மாகாண சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் காரியாலயம் தெரிவித்துள்ளது.