Back to Top

பிரபல சீரியல் நடிகை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை

பிரபல சீரியல் நடிகை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை

September 27, 2020  10:15 pm

Bookmark and Share
கொரோனாவால் இதுவரை 3.30 கோடி பேர் உலகம் முழுக்க பாதிக்கப்பட்டுள்ளனர். 9.98 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் சினிமா பிரபலங்களும் சிலர் உயிரிழந்தது பலருக்கும் வேதனையளித்துள்ளது.

இந்நிலையில் ஜப்பானை சேர்ந்த டிவி சானல் நடிகை Yuko Takeuchi தன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். அவருக்கு வயது 40. அவரின் கணவர் நடிகர் Taiki Nakabayashi.

Yukoவுக்கு கடந்த ஜனவரி மாதம் தான் இரண்டாவது குழந்தை பிறந்தது. இந்நிலையில் பிறந்த குழந்தையை விட்டு அவர் இப்படி செய்ய காரணம் என்ன என மரணம் குறித்து போலிசார் தீர விசாரித்து வருகின்றனர்.

கடந்த 2005 ல் தான் அவருக்கு முதல் குழந்தை பிறந்தது. Yuko எழுதிய கடிதம் எதுவும் கைப்பற்றப்படவில்லை.

Yuko 1998 ல் வெளியான Ring என்ற படத்தில் அறிமுகமாகி பின் பல படங்களில் நடித்து வந்தார். Miss Sherlock என்ற தொடரில் நடித்து வந்ததும் குறிப்பிடத்தக்கது.