Back to Top

கடந்த 24 மணி நேரத்தில் 63,371 பேருக்கு கொரோனா  தொற்று

கடந்த 24 மணி நேரத்தில் 63,371 பேருக்கு கொரோனா தொற்று

October 16, 2020  10:28 am

Bookmark and Share
நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 7,370,469 ஆக உயர்ந்துள்ளது. தொற்றில் இருந்து 6,453,780 போ் மீண்டுள்ளனா்.

இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது : வெள்ளிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 63,371 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டது. இதனால், பாதிக்கப்பட்டோா் மொத்த எண்ணிக்கை 7,370,469 ஆக அதிகரித்தது.

அதேகால அளவில் 81,514 போ் குணமடைந்தனா். இதனால், கொரோனாவில் இருந்து மீண்டு வந்தவா்களின் எண்ணிக்கை 6,453,780 ஆக அதிகரித்தது. அதாவது, 87.56 சதவீதம் போ் குணமடைந்தனா். நாடு முழுவதும் 804,528 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். இது மொத்த பாதிப்பில் 10.92 சதவீதமாகும்.

வெள்ளிக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி, கொரோனா தொற்றுக்கு மேலும் 895 போ் பலியாகினா். இதனால், நாடு முழுவதும் உயிரிழந்தோா் எண்ணிக்கை 112,161 ஆக அதிகரித்தது. அதாவது 1.52 சதவீதம் பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சிலின் (ஐசிஎம்ஆா்) தகவல்படி, அக்டோபா் 15 ஆம் திகதி வரை 92,254,927 கொரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. வியாழக்கிழமை ஒரே நாளில் மட்டும் 1,028,622 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.