Back to Top

IPL புள்ளிகள் பட்டியல் -  நம்பிக்கை ஏற்படுத்தியுள்ள பஞ்சாப் அணி!

IPL புள்ளிகள் பட்டியல் - நம்பிக்கை ஏற்படுத்தியுள்ள பஞ்சாப் அணி!

October 16, 2020  11:30 am

Bookmark and Share
ஆர்சிபி அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வென்றுள்ளது.

ஷார்ஜாவில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் விளையாடிய பெங்களூர் அணி 6 விக்கெட் இழப்புக்கு 171 ஓட்டங்கள் எடுத்தது. பிறகு விளையாடிய பஞ்சாப் அணி கடைசிப் பந்தில் சிக்ஸர் அடித்து இலக்கை அடைந்தது.

அந்த அணி 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 177 ஓட்டங்கள் எடுத்தது. பெங்களூர் அணியில் அதிகபட்சமாக கோலி 48 ஓட்டங்களும் பஞ்சாப் அணியில் ராகுல் 61 ஓட்டங்களும் கெயில் 53 ஓட்டங்களும் எடுத்தார்கள்.

பஞ்சாப் அணியின் வெற்றியால் புள்ளிகள் பட்டியலில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. பெங்களூர் அணி தொடர்ந்து 3 ம் இடத்திலும் பஞ்சாப் அணி கடைசி இடத்திலும் உள்ளன. இந்த வெற்றியின் மூலம் புதிய நம்பிக்கையுடன் அடுத்த ஆட்டங்களில் பஞ்சாப் அணி விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.