Back to Top

தந்தை இறந்த சோகத்திலும், தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய மந்தீப் சிங்

தந்தை இறந்த சோகத்திலும், தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய மந்தீப் சிங்

October 25, 2020  11:45 am

Bookmark and Share
மந்தீப் சிங்கின் தந்தை நேற்று முன்தினம் மரணமடைந்த நிலையிலும், நேற்று (சனிக்கிழமை) கிங்ஸ் வெலன் பஞ்சாப் அணிக்காகத் தொடக்க ஆட்டக்காரராகக் களமிறங்கியிருப்பது அவரது அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது.

ஐபிஎல் தொடரில் நேற்று (சனிக்கிழமை) நடந்த 2-வது ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் விளையாடின. பஞ்சாப் அணியில் மயங்க் அகர்வாலுக்குப் பதில் மந்தீப் சிங் சேர்க்கப்பட்டார். இதனால், அகர்வாலின் இடத்தில் தொடக்க ஆட்டக்காரராக மந்தீப் களமிறக்கப்பட்டார்.

போட்டிக்கு முந்தைய நாள் தந்தை மரணமடைந்த போதிலும், தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி விளையாடியது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது. நேற்றைய ஆட்டத்தில் அவர் 14 பந்துகளில் 17 ரன்கள் எடுத்தார்.

ஐபிஎல் தொடரில் பங்கேற்பதற்காக மந்தீப் சிங் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு வரும் சமயத்திலேயே அவரது தந்தை உடல்நலக் குறைவு காரணமாகச் சிகிச்சை பெற்று வந்ததாகக் கூறப்படுகிறது" என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.