Back to Top

IPL பிளே-ஆஃப்ஸ் சுற்று போட்டிகள் - திகதி மற்றும் இடங்கள் அறிவிப்பு!

IPL பிளே-ஆஃப்ஸ் சுற்று போட்டிகள் - திகதி மற்றும் இடங்கள் அறிவிப்பு!

October 26, 2020  11:50 am

Bookmark and Share
ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா கடந்த மாதம் 19 ஆம் திகதி தொடங்கியது. 8 அணிகள் மோதும் 56 லீக் ஆட்டங்கள் ஷார்ஜா, டுபாய், அபு தாபி நகரங்களில் நடைபெற்று வருகின்றன. லீக் ஆட்டங்கள் நவம்பர் 3 ஆம் திகதி முடிவடைகிறது.

10 ஆம் திகதி இறுதிப் போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பிளே-ஆஃப்ஸ் சுற்றுகள் எங்கே? இறுதிப் போட்டி எங்கே? என்ற விவரத்தை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

நவம்பர் 5 ஆம் திகதி குவாலிபையர்-1 (பாயின்ட் டேபிளில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள்) டுபாயில் நடைபெறுகிறது.

நவம்பர் 6 ஆம் திகதி எலிமினேட்டர் (3 வது மற்றும் 4 வது இடம் பெறும் அணிகள்) அபு தாபியில் நடக்கிறது.

நவம்பர் 8 ஆம் திகதி குவாலிபையர் 2 (குவாலிபையர் 1 தோல்வி - எலிமினேட்டர் வெற்றி) அபு தாபியில் நடக்கிறது.

நவம்பர் 10 ஆம் திகதி (குவாலிபையர் 1 வெற்றி - குவாலிபையர் 2 வெற்றி) இறுதிப் போட்டி நடக்கிறது.