Back to Top

தோட்டத்தொழிலாளர்களுக்காக 39,150 புதிய வீடுகளை நிர்மாணித்து உலக வாழ்விட தினத்தை கொண்டாடும் தோட்ட துரைமார் சங்கம்

தோட்டத்தொழிலாளர்களுக்காக 39,150 புதிய வீடுகளை நிர்மாணித்து உலக வாழ்விட தினத்தை கொண்டாடும் தோட்ட துரைமார் சங்கம்

October 26, 2020  04:16 pm

Bookmark and Share
பிரதேச தோட்ட நிறுவனங்களுக்கு சொந்தமான (RPC) தோட்டத் தொழிலாளர்களுக்காக 39,150 புதிய வீடுகளை நிர்மாணிப்பதற்காக RPCஇனால் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து இலங்கை பெருந்தோட்ட துரைமார் சங்கம் (PA) தமது பாராட்டினைத் தெரிவித்துள்ளது. இந்த மாத ஆரம்பத்தில் ஒதுக்கப்பட்டிருந்த உலக வாழ்விட தினத்தை கொண்டாடிய தோட்டத் தொழிலாளர்களின் சங்கம் கூறுகையில், பிரதேச தோட்ட நிறுவனங்கள் (RPCs) பெருந்தோட்ட தொழிற்சங்கம் மற்றும் அரசாங்கம் ஆகிய மூன்று பிரிவுகளால் உருவாக்கப்பட்ட பெருந்தோட்ட மனிதவள மேம்பாட்டு அறக்கட்டளையில் (PHDT) பதிவு செய்யப்பட்டுள்ள தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிர்வரும் ஐந்து வருடங்களுக்குள் 10,000 புதிய வீடுகளை நிர்மாணித்து கையளிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.

ஒரு மில்லியனுக்கும் அதிகமான ஒட்டுமொத்த மக்களைக் கொண்ட 2,51,950 குடும்பங்கள் தற்போது பிரதேச தோட்ட நிறுவனங்களில் உள்ளபோதிலும் ஒட்டுமொத்தமாக பதிவு செய்யப்பட்ட தோட்டத்தொழிலாளர்கள் 1,35,000 பேர் மாத்திரமே. RPCக்கு சொந்தமான தோட்டங்களில் வாழும் குடும்பங்களில் 16% வீதமானோருக்கே புதிய வீடுகள் கிடைத்துள்ளதுடன் 57% வீதம் அவர்களது வீடுகள் மீண்டும் மறுசீரமைக்கப்பட்டுள்ளன.

இந்த அனைத்து வீடுகளும் 7 பேர்சஸ் நிலப்பரப்பில் 550 சதுரப் அடியில் அமைக்கப்படவுள்ளதுடன் ஒரு வீட்டின் பெறுமதி ஒரு மில்லியன் ரூபாவாகும். இங்கு அமைக்கப்படும் அனைத்து வீடுகளும் இரண்டு அறைகளைக் கொண்டுள்ளதுடன், வரவேற்பறை, சமையலறை மற்றும் மலசலகூடம் போன்ற வசதிகளை உள்ளடக்கியதாகும். அத்துடன் குடிநீர் வசதிகளும் காணப்படுகிறது. வீட்டுத் தோட்டச் செய்கைக்காக பயன்படுத்தக் கூடிய விதத்தில் 3 பேச்சர்ஸ் நிலப்பரப்பு வீட்டைச் சுற்றி காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்த இலங்கை பெருந்தோட்ட துரைமார் சங்கத்தின் தலைவரும் எய்ட்கென் ஸ்பென்ஸின் எல்பிட்டிய பெருந்தோட்ட நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான பாத்திய புலுமுல்ல, எமது துறையில் முக்கியமான சக்தியாக அமைவது மனித வளமாகும். இந்த பல்வேறு வீட்டுத் திட்டங்களின் மூலம் எமது தோட்டத் தொழிலாளர் சமூகத்தின் நலன்புரி மற்றும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காக நாம் செய்யும் அர்ப்பணிப்பை மீண்டும் வலியுறுத்துகின்றன. என தெரிவித்தார்.

இலங்கையிலுள்ள பெருந்தோட்ட நிறுவனங்கள் தோட்டங்களிலுள்ள மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கான முக்கியத்துவம் குறித்து தொடர்ச்சியாக கவனம் செலுத்தியுள்ள புலுமுல்ல தோட்டத் தொழிலாளர்கள் 1,35,000க்கு போன்றே ஒரு பில்லியனுக்கும் அதிகமானனோருக்கு (அவர்களின் பெரும்பாலானோர் வேறு இடங்களில் தொழில் புரிபவர்கள்) நிரந்தர வீடுகளைப் பெற்றுக் கொடுக்க சங்கம் உச்ச அளவில் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

எமது தோட்ட நிறுவனங்களின் வசதிகளை மேம்படுத்துவதற்காக கடந்த சில வருடங்கள் முழுவதும் நிரந்தர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன என அவர் மேலும் தெரிவித்துள்ளார். அத்துடன் மீண்டும் பழுதுபார்க்கும் நடவடிக்கைகளை தற்காலிக நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

வீடுகளுக்கு பெரும் கேள்வி இருப்பதனால் அனைவருக்கும் புதிய வீடுகளை அமைத்துக் கொடுப்பதற்கு தேவையான காலமும் மற்றும் வளமும் தேவைப்படுகிறது. அதனால் புதிய வீடுகளை அமைக்கும் வரை தற்போதுள்ள அடிப்படை வசதிகளை பாதுகாப்பதற்காக மீண்டும் பழுதுபார்த்தல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. என அவர் சுட்டிக்காட்டினார்.

தேயிலைத் தொழில் நாட்டின் பொருளாதாரத்திற்கு பாரிய பங்களிப்பு செய்யும் துறை என்பதனால் சிறந்த தொழில் சக்தியொன்றை பராமரிப்பது மிகுந்த சவாலானதாகும். தோட்டங்களில் மேற்கொள்ளப்படும் துறையை சிறந்த விதத்தில் பார்ப்பது மிக முக்கியமானதாகும். என தெரிவித்துள்ளார்.

பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி அறக்கட்டளையானது அங்குள்ள தொழிலாளர்களுக்கு தேவையான வீட்டு அடிப்படை வசதிகளை மேம்படுத்தல், சுகாதாரம் மற்றும் சமூக நலன்புரி நடவடிக்கைகளுக்காக அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றது. என கூறும் புலுமுல்ல கொவிட்-19 தொற்றுநோய் காரணமாக ஏற்பட்டுள்ள பின்னடைவு காரணமாக சிறிய தாமதங்களுக்கு மத்தியிலும் குறித்த வேலைத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். என்றபோதிலும், பெரும்பாலான பிரிவுகளில் நாம் எதிர்கொள்ளும் சவால்கள் இருக்கின்றபோதிலும் அதனை பொருட்படுத்தாமல் இந்த நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப நடவடிக்கை எடுப்பது முக்கியமானதாகும். என தெரிவித்தார்.