Back to Top

இலங்கை சீனாவின் கடன் வலையில் சிக்கவில்லை

இலங்கை சீனாவின் கடன் வலையில் சிக்கவில்லை

October 28, 2020  05:40 pm

Bookmark and Share
பிரிவினைவாத யுத்தத்திற்கு பின்னர் நாட்டின் அபிவிருத்திக்கு சீனா உதவியதாகவும் ஆனால் சீனாவின் கடன் வலையில் சிக்கவில்லை எனவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அமெரிக்க இராஜாங்க செயலாளரிடம் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ இன்று (28) முற்பகல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடினார்.

இந்த சந்திப்பிலேயே ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.

´மற்ற நாடுகளுடனான இலங்கையின் உறவு பல காரணிகளைச் சார்ந்துள்ளது. அதாவது வரலாற்று மற்றும் கலாச்சார உறவுகள், மேம்பாட்டு ஒத்துழைப்பு ஆகியன இவற்றில் முக்கியமானவை. சர்வதேச உறவுகளின் போது நாட்டின் சுயநிர்ணயம், இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை விட்டுக்கொடுக்க தயார் இல்லை.´ என ஜனாதிபதி கூறினார்.

இதன்போது கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க இராஜாங்க செயலாளர், பொருளாதார இலக்குகளை அடைந்துக் கொள்வதற்கு அமெரிக்கா தொடர்ந்தும் இலங்கையுடன் ஒத்துழைப்புடன் செயற்படும் என கூறியுள்ளார்.

இரு நாடுகளுக்கு இடையில் காணப்படும் இரு தரப்பு உறவை மேலும் சக்திமிக்கதாய் பேணுவதற்கு தயாராக உள்ளதாகவும் அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜனாதிபதியிடம் கூறியுள்ளார்.

இந்து சமூத்திர நாடுகளுக்கு இடையில் சமாதானம் நிலவுவதை காண்பதே இலங்கையின் எதிர்பார்ப்பு எனவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அமெரிக்க இராஜாங்க செயலாளரிம் தெரிவித்துள்ளார்.

அத்துடன் சர்வதேச அரங்கில் மனித உரிமைகள் விடயத்தில் இரு நாடுகளும் ஒத்துழைப்புடன் செயற்படவும் இந்த சந்திப்பின் போது இணக்கம் காணப்பட்டுள்ளது.