Back to Top

புதிய கொவிட் 19 தொற்றாளர்கள் தொடர்பில் சற்றுமுன்னர் வௌியான செய்தி!

புதிய கொவிட் 19 தொற்றாளர்கள் தொடர்பில் சற்றுமுன்னர் வௌியான செய்தி!

October 28, 2020  07:07 pm

Bookmark and Share
இலங்கையில் மேலும் 211 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

தனிமைப்படுத்தல் நிலையங்களில் உள்ள ஒன்பது பேருக்கும் மற்றும் முன்னைய தொற்றாளர்களுடன் நெருங்கிப் பழகிய 202 பேருக்கும் இவ்வாறு கொவிட் 19 பரவியுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரால் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இவர்களில் 140 பேர் தற்போது தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் இருந்து பதிவாகியுள்ளனர்.

அதன்படி, மினுவங்கொடை மற்றும் பேலியகொடை கொவிட் கொத்தணியில் பதிவாகியுள்ள மொத்த கொவிட் 19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 5607 ஆக அதிகரித்துள்ளது.