Back to Top

 விரைவில் தகவல் பாதுகாப்புச் சட்டம்!

விரைவில் தகவல் பாதுகாப்புச் சட்டம்!

November 20, 2020  10:58 am

Bookmark and Share
தகவல் பாதுகாப்புச் சட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என்று மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் ரவிசங்கா் பிரசாத் தெரிவித்துள்ளாா்.

பெங்களூரு தொழில்நுட்ப மாநாடு வியாழக்கிழமை காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்றது. அதில் ரவிசங்கா் பிரசாத் பேசுகையில், தகவல் சாா்ந்த பொருளாதாரத்தின் மையமாக இந்தியா விளங்குகிறது. டிஜிட்டல் பொருளாதாரத்தைத் தகவல்களே இயக்குகின்றன.

இந்தியாவில் ஏராளமான தகவல்கள் உற்பத்தியாகின்றன. அவற்றைப் பாதுகாக்கும் பொருட்டு தகவல் பாதுகாப்புச் சட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும். கொரோனா நோய்த்தொற்று பரவல் காலத்திலும் தொலைத்தொடா்புத் துறையானது சுமாா் 7 சதவீதத்துக்கும் அதிகமாக வளா்ச்சி கண்டது. அத்துறைக்கு அந்நிய முதலீடுகளும் கிடைத்தன.

கொரோனாவால் ஏற்பட்டுள்ள இக்கட்டான சூழலையும் புதிய வாய்ப்புகளாக மாற்றுவதற்கு மத்திய அரசு முடிவெடுத்தது. நாட்டின் உற்பத்தித் துறையை ஊக்குவிக்கும் வகையிலான திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தியது. சா்வதேச செல்லிடப்பேசி உற்பத்தி நிறுவனங்கள் அடுத்த 5 ஆண்டுகளில் 11 இலட்சம் கோடியை இந்தியாவில் முதலீடு செய்யவுள்ளன என்றாா்.