Back to Top

2020 இல் இலங்கையின் முதல்நிலை Solar தயாரிப்புக்களின் (PV) விநியோகஸ்தராக Brantel Lanka சான்றளிக்கப்பட்டது

2020 இல் இலங்கையின் முதல்நிலை Solar தயாரிப்புக்களின் (PV) விநியோகஸ்தராக Brantel Lanka சான்றளிக்கப்பட்டது

December 2, 2020  02:57 pm

Bookmark and Share
உலகளாவிய சூரியக்கல, சக்திச் சேமிப்புத் தொழிற்றுறைகளில் சான்றளிக்கும் முன்னணி நிறுவனமான உலகளாவிய சூரியக்கலத்துக்கான இணைந்த சக்திகள் (Joint Forces for Solar Global - JF4S) என்ற அமைப்பால் மொத்த விற்பனைப் பிரிவில் 2020இல் இலங்கையின் முதல்நிலை PV விநியோகிஸ்தர் என Brantel Lanka (Pvt) Ltd பெயரிடப்பட்டுள்ளது.

ஜேர்மனியின் பொன் (Bonn) நகரத்தில் தலைமையகத்தைக் கொண்டுள்ள EUPD Research என்ற அமைப்பால் இச்சான்றளிப்புப் பலமளிக்கப்பட்டுள்ளது. EUPD Research என்பது தரவுகளை அடிப்படையாகக் கொண்ட ஆராய்ச்சிகளுக்கும் ஆலோசனைச் சேவைகளுக்கும் உலகளாவிய மட்டத்தில் முன்னிலையான ஒரு நிறுவனமாகும். தற்போது வழங்கப்பட்டுள்ள 2020 ஆம் ஆண்டுக்கான விருதுகள், உலகளாவிய சக்தி மாற்றல் சந்தைகள் 73 நிறுவனங்களின் மதிப்பீடுகள், வாடிக்கையாளர்களிடத்தில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்புகள் ஆகியவற்றின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளன. பொறியியல், கொள்முதல், கட்டுமானம் (இவை மூன்றும் சேர்ந்து EPC எனப்படும்) ஆகியவற்றின் வாடிக்கையாளர்கள், செயற்றிட்ட உருவாக்குநர்கள் ஆகியோரைப் பங்குதாரர்களாகக் கொண்டு இவை மேற்கொள்ளப்பட்டிருந்தன.

SMA, GoodWE ஆகிய சூரியக்கல நேர்மாற்றிகள் (Solar inverters), JA Solar PV modules, KBE சூரியக்கல நேர் மின்னோட்டக் (DC) கம்பிகள் உள்ளிட்ட முன்னணி பூகோள வணிகக்குறிகளால் தயாரிக்கப்படும் சூரியக்கல சக்திக் கருவிகளை Brantel Lanka நிறுவனம் விநியோகிப்பதோடு, இதன் மூலமாக உலகில் அதிகம் மதிக்கப்படும் உற்பத்தியாளர்களின் சிறந்த உற்பத்திகள் மூலமாக, ஒப்பிடப்பட முடியாத புதுப்பிக்கத்தக்க சக்தித் தீர்வுகளை வழங்குகிறது.

பொறியியில், கொள்முதல், கட்டுமானம் ஆகிய மூன்றினதும் வாடிக்கையாளர்கள், அவர்களினது வாடிக்கையாளர் குழு ஆகியோரிடத்தில் அளவிடத்தக்க, அளவிட முடியாத கேள்விப்பட்டியல்கள், நேர்காணல்கள் மூலமாக 2020 ஆம் ஆண்டுக்கான விருதுகளுக்கான தரவுகள் பெறப்பட்டு, EUPD Research ஆராய்ச்சி அணியால் வழங்கப்பட்டுள்ள பல்வேறான சுட்டிகளுக்கேற்ப அவை ஆராயப்பட்டன. நிறுவனத்தின் மதிப்பீட்டில் முகாமைத்துவ அணியின் விவரங்கள், பொருத்துதல்கள் (kWp/MWs), இன்றுவரை முழுமை செய்யப்பட்டுள்ள செயற்றிட்டங்கள், எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படத் திட்டமிடப்பட்டுள்ள செயற்றிட்டங்கள், நிறுவனத்தில் சம்பந்தப்பட்ட ஏனைய தகவல்கள், வாடிக்கையாளர்களின் அனுபவங்களும் பரிந்துரைகளும் ஆகியன உள்ளடக்கப்பட்டிருந்தன.

வாடிக்கையாளர்களின் மதிப்பீட்டில் விற்பனைப் பரிமாற்றத்தில் திருப்தி, பொருத்தப்பட்ட PV கட்டமைப்பின் தரம், வழங்கப்பட்ட சேவையின் தரம், விற்பனைக்குப் பின்ரான சேவையின் தரம், ஒட்டுமொத்தமான திருப்தி ஆகியன கருத்திற்கொள்ளப்பட்டிருந்தன. 2,000 க்கும் மேற்பட்ட வணிக வாடிக்கையாளர்களுக்கான தொழில்நுட்ப, பெறுமதிசேர் சேவைகளை, Brantel Lanka நிறுவனம் வழங்குகிறது. விற்பனை அலைவரிசைகளை இலகுபடுத்துவதற்காகவும் துரிதப்படுத்துவதற்காகவும், உலகம் முழுவதிலுமுள்ள முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களுடன் Brantel இணைந்து செயற்படுகிறது. கடந்த 17 ஆண்டுகளாகத் தனது வாடிக்கையாளர்களுக்கு நிபுணத்துவ விற்பனைகளையும் தொழில்நுட்ப ஆதரவையும், நாடு முழுவதிலும் காணப்படும் தனது கிளைகள் மூலமாகவும் முகவர்கள் மூலமாகவும் Brantel வழங்கியுள்ளது.

Copper and fibre network cables, passive network components, Solar Inverters, PV modules, point-of-sale thermal printers, and digital smart board solutions போன்ற பெறுமதிமிக்க தயாரிப்புக்கள், Brantel நிறுவனத்தில் காணப்படுகின்றன. அதேபோல், E-tel Mini Computers, Android smart phones, tablets, Basic feature phones, Corning ஆகியவற்றுக்கான தேசிய விநியோகஸ்தராகவும் Brantel காணப்படுகின்றது.