Back to Top

 2020 ஆம் ஆண்டின் இலங்கை பொருளாதார மாநாட்டில்  பிரதமர் ஆற்றிய முழுமையான உரை

2020 ஆம் ஆண்டின் இலங்கை பொருளாதார மாநாட்டில் பிரதமர் ஆற்றிய முழுமையான உரை

December 2, 2020  10:13 pm

Bookmark and Share
புதிய உத்திகளை பயன்படுத்தி நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் பொறுப்பு மற்றும் சவால்களை அரசாங்கம் ஏற்க தயார் என இலங்கை வர்த்தக சம்மேளனம் ஏற்பாடு செய்த 2020ஆம் ஆண்டுக்கான இலங்கை பொருளாதார மாநாட்டில் இணையவழி காணொளி ஊடாக இன்று (02) கலந்துகொண்ட பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

எதிர்வரும் வருடங்களில் எமது நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கு அரச மற்றும் தனியார் துறையினரோடு இணைந்து சவால்களை நிர்வகிக்க வேண்டுமென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இங்கு சுட்டிக்காட்னார்.

2020 ஆம் ஆண்டின் இலங்கை பொருளாதார மாநாட்டில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆற்றிய முழுமையான உரை வருமாறு,

நண்பர்களே, இலங்கை வர்த்தக சம்மேளத்தினால் ஒழங்கு செய்யப்பட்ட வருடாந்த பொருளாதார மாநாட்டில் கலந்து கொண்டு ஒரு சில வார்த்தைகள் பேசுவதற்கு எமக்கு அழைப்பு விடுத்தமை தொடர்பில் முதலாவதாக அச்சம்மேளனத்தின் தலைவர் உட்பட நிர்வாகச்சபையினருக்கு நன்றிகளை தெரிவத்துக்கொள்கிறேன்.

உலகிலுள்ள பல நாடுகளையும் விட இலங்கை கொவிட் 19 தொற்றினை மிகவும் முறையான விதத்தில் கட்டுபாட்டுக்கள் வைத்திருப்பதனை அதிகளவானோர் ஏற்றுக்கொண்டுள்ளனர். அத்துடன் பொருளாதாரத்தை முறையாக நிர்வகித்து முன்னோக்கி செல்வதற்கு முடியும் என்பதனையும் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

அது மட்டுமின்றி; இதுவரை கொவிட் 19 தொற்றினை கட்டுபாட்டுக்குள் வைத்திருக்கும் நாடுகள் வரிசையில் இலங்கையானது முன்னிலை வகிப்பதுடன், பல துறைகளிலும் பொருளாதார முன்னேற்றத்தினை சாதகமான முறையில் பதிவு செய்வதற்கு எம்மால்; முடிந்துள்ளது.

நண்பர்களே, எமது நாடு எதிர்நோக்கியுள்ள முதன்மையான சவாலானது அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களினால் நாட்டிற்கு வழங்கிய வாக்குறுதியின் படி மக்களை மையமாகக்கொண்ட எனும் பொருளதார புத்தெழச்சியினை ஏற்படுத்துவதாகும்.

இதனிடையில் கொவிட் 19 தொற்றுக்கு மத்தியில் மதிப்பிடப்படட்ட பொருளாதார வீதம், அம்முயற்சிக்கு பாரிய தடைகள் உள்ளன எனவும் பல நபர்களால் கணிக்கப்பட்ட போதிலும் அவ்வாறன தடைகள் ஏற்படுவதனை குறைத்து பொருளாதார புத்தெழுச்சியினை ஏற்படுத்துவது எமக்குள்ள பாரிய சவாலாகும்.

இக்குறிக்கோள்களை அடைய அரசாங்கம் புதிய உத்திகளை கையாண்டுள்ளது என உங்களுக்கு தெரியும். நாட்டிலுள்ள வர்த்தகர்களை பாதுகாக்கும் பொருட்டு அவர்களுக்காக ´கடன் விலக்குகளை´ வழங்குமாறு அரச வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு ஆலோசனை வழங்கினோம்.

நாட்டின் வெளிப்புற கணக்கினை முறையாக நிர்வகிப்பதன் மூலம் ரூபாய் மதிப்பினை பாதுகாத்து அரசாங்கத்தின் கடன் அழுத்தங்களை குறைப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டோம்.

ஐந்து மில்லியனுக்கும் அதிகமான குடும்பங்களுக்கு கொவிட் -19 தொற்றுக்கு முகங்கொடுப்பதற்கு நேரடி நிதி ஒதுக்கீடுகளை வழங்குவதன் மூலம் வாழ்வாதார பிரச்சினைகளுக்கு நிவாரணம் வழங்க எம்மால் முடிந்தது.

சிறிய மற்றும் நடுத்தர அளவிலான வர்த்தக நடவடிக்கைகள் பாதிப்படையாதிருப்பதற்கு வரி மற்றும் வட்டி சலுகைகளை பெற்றுக் கொடுத்தோம். நீர், மின்சாரம், அனுமதி பத்திர கட்டணம் ஆகியவற்றை செலுத்த எம்மால் கால அவகாசம் வழங்கப்பட்டது. குத்தகை தவணை மற்றும் வட்டி செலுத்துவதற்கான சலுகைகள் வழங்கப்பட்டன.

இவ் அனைத்து நடவடிக்கைகளிலும் அரச ஊழியர்களை ஈடுபடுத்துவதன் மூலம் அவர்களின் செயல்திறன்களை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

சுங்கம், வருமான வரி, கலால், முதலீட்டு சபை, மின்சாரம், எரிபொருள், துறைமுகங்கள், விமான நிலையங்கள், வங்கிகள், நிறுவன பதிவாளர் ஆகிய நிறுவனங்கள் மற்றும் திணைக்களங்கள் உள்ளிட்ட பல அரச நிறுவனங்களால் தனியார் நிறுவனங்களுக்கு வழங்கவேண்டிய சேவையினை பாரிய சவால்களுக்கு மத்தியில் பெற்றுக்கொடுக்க அரச சேவை தலையிட்டது.

முதன்மையாக கொவிட்-19 தொற்றினை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை ,முப்படைகள், காவல்துறை மற்றும் கிராம நிர்வாக பொறிமுறை உட்பட அனைத்து அரசு ஊழியர்களின் அர்ப்பணிப்புடன் முன்னெடுக்க வேண்டிய அனைத்து சேவைகளையும் பெற்றுக் கொடுக்க அரசாங்கத்திற்கு முடியுமாயிற்று.

இவ் அனைத்து நடவடிக்கைகளினதும் குறிக்கோளானது மக்களின் வாழ்வாதாரம் மற்றும் நாட்டின் வர்த்தகத்தை திறம்பட மேம்படுடுத்துவதாகும். நாம் அவ்வாறு செய்யாவிடில் நாடளாவிய ரீதியில் பரந்துள்ள நடவடிக்கைகள் மிகவும் சிரமத்திற்கும் பாதிப்பிற்கும் உள்ளாகியிருக்கும். அவ்வாறு இடம்பெற்றிருப்பின் நாட்டின் பொருளாதாரம் சீர்குலைந்து போயிருக்கும். அரசாங்கத்தால் கடனை மீள்செலுத்த முடியாமல் போயிருக்கும்.

அவ்வாறு நடைபெற்றிருந்தால் நாடு பாரிய நெருக்கடிகளுக்கு உள்ளாகியிருக்கும். அவ்வாறான சூழ்நிலையில் பல மில்லியன் கணக்கான தொழில் வாய்ப்புகளை இழக்கவும், அனைத்து மக்களும் அதிர்ச்சி மற்றும் விரக்திக்குள்ளாவதற்கும் வாய்ப்பிருந்தது.

பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தமை காரணமாக நாட்டில் பெரும்பான்மையான மக்கள் நிர்கதியான நிலைக்கு தள்ளப்படும் அபாயமும் இருந்தது. மேலும் சில சந்தர்ப்பங்களில் சிலர் அவ்வாறு நடைபெறும் வரை எதிர்பார்த்திருந்திருப்பார்கள் என்றும் சந்தேகம் கொள்ள வேண்டியிருக்கும்.

ஆனாலும் இப்பிரச்சினைகள் அனைத்திற்கும் மத்தியில் இந்த சவால்களை நேரடியாக எதிர்கொள்வதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை உறுதிப்படுததுவதற்கு எமது அரசாங்கத்திற்கு முடிந்தது. இது தொடர்பில் வர்த்தகத்தில் ஈடுபட்டிருக்கும் நீங்கள் நன்றாக புரிந்து கொண்டிருப்பீர்கள் என நான் நம்புகின்றேன்.

எது எவ்வாறாயினும் இந்நிலைமை தொடர்பாக ஆரம்பத்தில் திருப்தி அடைவதுடன், இந்த அடித்தளத்தை நோக்கி பொருளாதாரத்தையும் மக்களின் வாழ்வாதாரத்தையும் மேலும் வலுப்படுத்துவதற்கு அனைத்து விதமான முயற்சிகளையும் நாம் மேற்கோள்ள வேண்டும் என நாம் நினைவுபடுத்த வேண்டும் என எண்ணுகின்றேன்.

நண்பர்களே, நாம் பார்க்கும் கோணத்திலேயே மேலும் செல்வதற்கு முன்னர் முழு நாடும் மீண்டும் அபிவிருத்தி பாதைக்கு உட்படுத்த வேண்டும். முழு நாடும் ஒரு வேலைத்தளமாக்கப்பட வேண்டும். அவ்வாறு செய்வது உங்கள் சம்மேளனத்தின் ஒரு நோக்கமாகும் என்பது எமக்கு தெரிகின்றது. அது தொடர்பாக நாம் குறிப்பாக மகிழ்ச்சியடையும் அதேவேளை அப்பணிகளுக்காக அரசாங்க தலைவர்கள் மற்றும் தனியார் நிறுவனங்களின் தலைவர்கள் ஒன்றாக இணைந்து திட்டமிடுதல் தகவல் மற்றும் உத்திகளை உருவாக்குதல் மிக மதிப்புக்குரிய முயற்சியாக நாம் காண்கின்றோம்.

கடந்த சில மாதங்களில் இத்தகைய முயற்சிகளின் ஒரு முக்கியமான விளைவுகளில் ஒன்றாக நாட்டிற்குள் உள்வாங்கப்படும் ஏற்றுமதி வருமானம் மற்றும் வெளிநாட்டு சேவை பரிமாற்றம், தொற்றுக்கு முன்னைய நிலையை விட உயர்ந்த நிலையை அடைந்துள்ளது. அரசாங்கத்தினால் காலத்திற்கு ஏற்ற வகையில் விதிக்கப்பட்ட இறக்குமதி கட்டுப்பாடுகள் காரணமாக, எமது வெளிப்புற கணக்கில் சில நிவாரணங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதுடன், அப்பயனாளிகள் மூலம் வெளிப்புற கணக்கில் மிகையும் அதிகரித்துள்ளது.

ஆயினும், நாட்டிற்கு கிடைக்கும் அந்நிய நேரடி முதலீடுகள் இதுவரை எமக்கு மகிழ்ச்சியடையக்கூடிய நிலையை எட்டவில்லை. அம்முதலீடுகளை அதிகரிப்பதற்கு தனியார் துறையினர் மேலும் தீவிரமாக செயற்பட வேண்டும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். நீங்களும் அம்முயற்சிகளுக்கு ஏகோபித்த ஆதரவினை வழங்கும் அதேவேளை நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான நடிவடிக்கைகளை மேற்கோள்வதற்கு நாம் உங்களுக்கு அழைப்பு விடுக்கின்றோம்.

நண்பர்களே பொருளாதார மாநாட்டின் முதல் நாளில் பொருளாதார புத்தெழுச்சி தொடர்பாக உலகளாவிய மற்றும் தேசிய ரீதியாக உத்திகளை கையாள்வது தொடர்பில் நீங்கள் கலந்தாலோசித்ததாக எமக்கு தெரிகின்றது. மேலும் நாட்டினை கட்டியெழுப்புவது தொடர்பில் தனியார் துறையின் பங்குகள் குறித்தும் விவாதித்தீர்கள்.

நாட்டின் பொருளாதார செயற்திட்டத்தினை மேலும் அபிவிருத்தி செய்வதற்கு நமது நாட்டின் வளங்களை உபயோகித்து நாட்டின் பொருளாதாரத்தை மேலும் எவ்வாறு அபிவிருத்தி செய்வது தொடர்பில் நீங்கள் ஆழமான கலந்துரையாடலை மேற்கொண்டீர்கள்.

அது மட்டுமின்றி பொருளாதார புத்தெழுச்சியடைய தொழில்டநுட்பத்தை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது தொடர்பிலும் நீங்கள் கவனம் செலுத்தியுள்ளீர்கள். இதன் மூலம் நம் நாட்டினை விரைவான வளர்ச்சிப்பாதையில் இட்டுச்செல்வதற்கு நீங்களும் மிகப்பெரிய முயற்சியினை மேற்கொள்கிறீர்கள் என்பது புலப்படுகிறது.

மேலும் நாம் கலந்துகொள்ளும் சில அமர்வுகளுக்குப்பிறகு அரச நிறுவனங்களை திறமையாக கட்டுபாட்டுக்குள் வைத்திருப்பது தொடர்பான கருத்துக்களை பரிமாற்றிக்கொள்வதற்கு நீங்கள் எதிர்பார்த்துள்ளதாக எமக்கு தெரிகின்றது.

நாம் அனைவரினதும் வாதங்களையும் ஒப்புக்கொள்வது போல் அரச நிறுவனங்கள் நாட்டின் பிரதான பங்கினை மேற்கொள்வதுடன்,அவற்றை மென்மேலும் மக்கள் கேந்திர மையம் மற்றும் மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யும் விதத்தில் ஒழுங்கமைத்தல் அத்தியவசிமானது.

நண்பர்களே இன்றுவரை 5000 மில்லியன்களுக்கும் அதிகமான (500 பில்லியன்) மதிப்புடைய பாரிய அளவிலான 289 திட்டங்கள் அரச அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்கள் மூலம் செயற்படுத்தப்படுகின்றன. அவை சரியான நேரத்தில் மற்றும் பொருத்தமான மதிப்புகளை நிறைவுசெய்வது மிக முக்கியம் ஆகும். . (“on time” and “on budget”).

அது மட்டுமின்றி அரசுக்கு சொந்தமான 400க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இன்று பல்வேறு சேவைகள் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன. சுமார் 1.8 மில்லியன் அரச ஊழியர்கள் பொதுத்துறையில் பணியாற்றுகின்றனர். அப்படியென்றால் இந்த பரந்த உடல் மற்றும் மனித வளம் திறமையாக, மக்களை நட்பு ரீதியாக முழுநாட்டிற்கும் சக்தி மிக்க ஆற்றல்வாய்ந்த நன்மை பயக்கும் வகையிலிருப்பதை நம் நாட்டிற்கு பெரும் முன்னுரிமையாக இதை பார்க்கின்றோம். இக்குறிக்கோளினை அடைவதற்காக வரும் காலங்களில் உங்களின் தொடரச்சியான ஆதரவினையும் அர்ப்பணிப்பினையும் எதிர்பார்க்கின்றோம்.

நண்பர்களே, கொவிட் தொற்று காரணமாக எமது நாட்டுக்கு ஏற்பட்டுள்ள நட்டம் மற்றும் பாதிப்புகளில் முன்னிலை வகிக்கும் துறை யாது எனில் அது சுற்றுலாத் துறையாகும். விமான நிலையம் மற்றும் துறைமுகம் ஊடாக எம் நாட்டிற்கு சுற்றுலா பயணிகள் வருகை தருவதற்கு முடியாமையால், எமது பொருளாதாரத்தில் அது ஒரு பாரிய இடியாக அமைந்துள்ளமை யாவரும் அறிந்ததே. அதன் மூலம் பல வாழ்வாதாரங்கள் பாதிக்கப்பட்டமையும் அறிந்ததே. அப்பாதிப்பு மற்றும் நட்டத்தை குறைப்பதற்கு அத்துறைகளில் ஈடுபட்டுள்ள நபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு கடன் மற்றும் வட்டி நிவாரணங்களை பெற்றுக் கொடுத்து, சலுகை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளமையும் நீங்கள் அறிந்ததே. அதேபோன்று இச்சுற்றுலாத்துறையில் வளங்களை பாதுகாத்து, எதிர்காலத்தில் இத்துறையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு நாம் தயாராக வேண்டும். அதனால் இப்பிரச்சினை தொடர்பிலும் நீங்கள் கவனத்திற் கொண்டுள்ளமை மகிழ்ச்சியான விடயமாகும்.

நண்பர்களே, 2020ஆம் ஆண்டில் எமது அரசாங்கத்திற்கு முகங்கொடுக்க நேரிட்ட சவால்கள் அதிகமாகும். அந்த சவால்கள் கொவிட் தொற்றினால் மாத்திரம் உச்சமடையவில்லை. 2015ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை எமது பொருளாதாரத்தில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க பின்னடைவும் காரணம் என்பது அவைரும் அறிந்ததே. நாம் எதிர்க்கட்சியை குற்றம் சாட்டி காலத்தை வீணடிக்கவில்லை. அவ்வாறு செய்யாது மக்கள் எம்மிடம் எதிர்பார்த்த பணிகளை மேற்கொண்டு எமது பொறுப்பை நிறைவேற்றினோம்.

அதற்கமைய, கடந்த மாதத்தின் நடுப்பகுதியில், அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்வைத்த சுபீட்சத்தின் நோக்கு திட்டத்தை யதார்த்தமாக்குவதற்கான முதன்மை கட்டமாக, நாம் புதிய அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தை முன்வைத்தோம். அதன் மூலம், 2021 ஆண்டில் 5.5 வீத வளர்ச்சியை ஏற்படுத்துவதற்கும், பொருளாதார காரணிகள் சிறந்த நிலையில் பேணுவதற்கும், வரி கொள்கையை மாற்றமின்றி பராமரிக்கவும், பொருளாதாரத்திற்கு புதிய உத்வேகத்தை ஏற்படுத்துவதற்கும், நாம் யோசனைகளை முனவைத்தோம். இவற்றை செயற்படுத்துவதற்கு எமது அரசாங்கத்தின் அனைத்து அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகத் துறை அதிகாரிகள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

நண்பர்களே, அரச சேவைகள் அவ்வாறு செய்யும்போது, எமது நாட்டின் பொருளாதாரத்தில் புத்தெழுச்சியை ஏற்படுத்துவதற்கு உங்களது வர்த்தக சம்மேளனத்தின் உறுப்பினர்கள் ஆர்வமாக காணப்படுவதை எம்மால் காண முடிகிறது. அது குறித்து நாம் மகிழ்ச்சியடைவதுடன், அதன் மூலம் பொருளாதார புத்தெழுச்சி என்பது அரசாங்கத்தினது மாத்திரம் பொறுப்பல்ல என்பதும், நீங்கள் சேவையாற்றும் தனியார் நிறுவனங்களதும் பொறுப்பாகும் என்பதனை நீங்கள் ஏற்றுக் கொண்டிருப்பது உறுதியாகிறது. இதுவொரு முக்கிய போக்காகும். இது தொடர்பில் நாம் உங்கள் அனைவருக்கும் எமது அரசாங்கத்தின் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்ள விரும்புகிறோம்.

நண்பர்களே, எதிர்வரும் ஆண்டுகள் எமக்கு தீர்மானம் மிக்க ஆண்டுகளாகும். எமது நாட்டின் பொருளாதார ரீதியான முன்னோக்கிய பயணத்தை வலுப்படுத்தும் காலமாகும். எதிர்வரும் இக்காலப்பகுதி வெற்றியளிக்க வேண்டுமாயின், நாம் அனைவரும் ஒன்றிணைந்து இச்சவாலை நிர்வகித்துக் கொள்ள வேண்டும். அதற்கு, நாம் புதிய உத்திகளை செயற்படுத்த வேண்டும். இதுவரையான உங்களது வெளிப்பாடுகளிலிருந்து நீங்கள் அனைவரும் இச்சவாலை ஏற்பதற்கு தயாராகவிருக்கின்றீர்கள் என்பது புலப்படுகிறது.

அரசாங்கம் என்ற ரீதியில், நாமும் அந்த பொறுப்பை ஏற்பதற்கு தயாராகவுள்ளோம். அவ்வாறாயின் எம்முடன் இணைந்து, எமது நாட்டின் பொருளாதாரத்தை மறுமலர்ச்சியை நோக்கி கொண்டு செல்வதற்கு நாம் உங்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறோம். அத்துடன், உங்களது சம்மேளனத்தின் தலைவர் திரு.பான்ஸ் விஜேசூரிய உள்ளிட்ட அனைவருக்கும் நாம் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். என்றார்.