Back to Top

கட்டியெழுப்பப்பட்ட சூழல் சர்வதேச மாநாட்டின் பிரதான அனுசரணையாளராக INSEE சீமெந்து கைகோர்ப்பு

கட்டியெழுப்பப்பட்ட சூழல் சர்வதேச மாநாட்டின் பிரதான அனுசரணையாளராக INSEE சீமெந்து கைகோர்ப்பு

January 13, 2021  09:24 am

Bookmark and Share
பேராதனை பல்கலைக்கழகம், மொரட்டுவ பல்கலைக்கழகம், றுஹுண பல்கலைக்கழகம் மற்றும் திறந்த பல்கலைக்கழகம் ஆகியவற்றினால் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 11ஆவது நிலைபேறான வகையில் கட்டியெழுப்பப்படல் சூழல் சர்வதேச மாநாடு 2020 இன் அனுசரணையாளராக இலங்கையின் முன்னணி சீமெந்து உற்பத்தியாளரான INSEE சீமெந்து கைகோர்த்திருந்தது.

கண்டி மாநாடு என அழைக்கப்படும் இந்த சர்வதேச மாநாடு, 2 நாள் மெய்நிகர் நிகழ்வாக இடம்பெற்றது, சிந்தனைகள் பகிர்வுக்கும், அறிவு மற்றும் அனுபவப் பகிர்வுக்கும் உகந்த களமாக இது அமைந்திருந்தது. கல்விமான்கள், நிபுணர்கள் மற்றும் கொள்கை வடிவமைப்பாளர்கள் மத்தியில் கட்டியெழுப்பப்பட்ட சூழல் தொடர்பில் தகவல் பரிமாற்றத்துக்கு சிறந்த களத்தை ஏற்படுத்தியிருந்தது.

2010 டிசம்பர் மாதம் முதல் வருடாந்தம் இடம்பெறும் இந்த மாநாட்டினூடாக, நிலைபேறான வகையில் நிர்மாணிக்கப்பட்ட சூழல் தொடர்பில் பிரயோக சிந்தனைகள் மற்றும் தற்போதைய கொள்கைகளுடன் தொடர்புடைய விசேட அமர்வுகளை கொண்டிருந்ததுடன், இதில் உள்நாட்டு மற்றும் சர்வதேச பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆய்வு நிலையங்கள் போன்றன கைகோர்த்து நாளைய அபிவிருத்திக்காக புத்தாக்கமான ஆய்வை முன்னெடுப்பது தொடர்பில் ஆராய்ந்து வருகின்றன. 2500க்கும் அதிகமான கல்விமான்கள், ஆய்வாளர்கள், பொறியியலாளர்கள், தொழிற்துறைசார் நிபுணர்கள் மற்றும் மாணவர்கள் என உள்நாட்டு மற்றும் சர்வதேச பிரதிநிதிகள் இதில் பங்கேற்றிருந்தனர். இந்த நிகழ்வில் ஆறு விசேட உரைகள் இடம்பெற்றிருந்ததுடன், 13 விசேட அமர்வுகள் மற்றும் இரு நேரலை குழுநிலை கலந்துரையாடல்கள் போன்றனவும் அடங்கியிருந்தன.

பங்கேற்றவர்களை வரவேற்று இந்த மாநாட்டை இணைந்து ஒழுங்கிணைப்பு செய்திருந்த பேராசிரியர் ரஞ்சித் திசாநாயக்க கருத்துத் தெரிவிக்கையில், “இன்றைய காலகட்டத்துக்கு பொருத்தமான மற்றும் முக்கியமாக கட்டியெழுப்பப்பட்ட நிலைபேறான சூழலில் எமது அறிவை பகிர்ந்து கொள்வது என்பது இந்த மாநாட்டின் நோக்கமாக அமைந்துள்ளது. இயற்கையான மற்றும் கட்டியெழுப்பப்பட்ட சூழல் தொடர்பிலான முக்கியத்துவத்தையும் கொவிட் தொற்றுப் பரவல் உணர்த்தியிருந்தது. தமது அறிவையும், புத்தாக்கத்தையும் பகிர்ந்து கொள்ள பெருமளவு நிபுணர்கள் கலந்து கொண்டிருந்ததுடன், பல புகழ்பெற்ற ஆய்வாளர்கள் தமது ஆய்வுகளையும் வெளிப்படுத்தியிருந்தனர்.” என்றார்.

பங்குபற்றுநர்களுக்கு பிரதம அதிதியாக கலந்து கொண்ட இலங்கையின் பிரதமர் மஹிந்த ராஜபக்ச வழங்கியிருந்த செய்தியில், சுபீட்சமான தேசத்தை உருவாக்கும் அரசாங்கத்தின் பயணத்தில் நிலைபேறான சூழல் கொள்கையை கட்டியெழுப்பி அதனைப் பேணுவது என்பது இலக்காக அமைந்துள்ளது என்றார். சீமெந்தின் விற்பனை, சந்தைப்படுத்தல் மற்றும் புத்தாக்கம் என்பவற்றின் நிறைவேற்று பிரதித் தலைவர் ஜான் குனிக் கருத்துத் தெரிவிக்கையில், “மனித விருத்தியில் நிர்மாணம் என்பது எப்போதும் அடிப்படை அம்சமாக அமைந்திருந்தது. மனித குலத்தின் பழமையிலிருந்து வியாபித்து மேம்பட்டு வரும் வியாபாரமாகவும் அமைந்துள்ளது. குறிப்பாக சனத்தொகை அதிகரிப்பு மற்றும் நகரமயமாக்கலுடன் இந்தத் தொகை அதிகரித்துச் செல்கின்றது.” என்றார். வளங்கள் நிறைந்து காணப்படும் இந்தத் துறையில், நிலைபேறாண்மையை உறுதி செய்வதற்கு புத்தாக்கமான வழிமுறைகளை அறிமுகம் செய்யும் நிறுவனம் எனும் வகையில், நாட்டில் அதிகரித்துச் செல்லும் கேள்விகளுக்கும், நுகர்வோரின் எதிர்பார்ப்புகளுக்கும் உகந்த வகையில் தனது செயற்பாடுகளை மேம்படுத்துவது என்பதில் நிறுவனம் கவனம் செலுத்துகின்றது எனக் குறிப்பிட்டார்.

குனிக் மேலும் குறிப்பிடுகையில், “உலகில் நாம் ஐந்து பாரிய போக்குகளை இனங்கண்டுள்ளோம், இவை நிர்மாணத்துறையை வடிவமைப்பதுடன், நிலைபேறான நிர்மாணத் தீர்வுகளை மீளமைத்து வழங்குவதில் எம்மை வழிநடத்துகின்றன. இந்த பாரிய போக்குகளுக்கு மேலாக, உலகளாவிய ரீதியில் சீமெந்து மற்றும் கொங்கிறீற் கேள்வி அதிகரித்துச் செல்வதை நாம் அவதானிக்க முடிந்ததுடன், இயற்கை வளங்களை தக்க வைத்துக் கொள்ள முடியாத வகையில் அமைந்துள்ளதையும் காண முடிகின்றது.” என்றார்.

நிறுவனத்தின் பங்களிப்பு தொடர்பில் குறிப்பிடுகையில், “நிர்மாணம் மற்றும் கட்டட மூலப்பொருட்கள் துறையில் முன்னோடி எனும் வகையில், INSEE சீமெந்து, கூட்டாண்மை நிறுவனம் எனும் வகையில் காலநிலை பாதுகாப்பு தொடர்பான நோக்கை எய்துவதில் பங்களிப்பு வழங்கும். எதிர்காலத்தில் சூழலுக்கு பாதுகாப்பான துறையை கட்டியெழுப்ப அர்ப்பணிப்புடன் செயலாற்றும்.” என்றார்.

முடிவாக குனிக் குறிப்பிடுகையில், “மீண்டெழும், நிலைத்திருக்கும் மற்றும் நிலைபேறான பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் அவசியமான வழிகாட்டல்களை வழங்குவதில் நாம் முக்கிய பங்கை வகிப்போம். இணைந்து செயலாற்றுவது என்பது முக்கியமானது என்பதுடன், ஒரு தரப்பால் மாத்திரம் சாதிக்க முடியாது. எமது இலக்குகளை ஒன்றிணைந்து எய்த முடியும் என்பதை குறிக்கும் ஒரு மைல்கல்லாக இந்த மாநாடு அமைந்திருக்கும் என்பதில் நான் நம்பிக்கை கொண்டுள்ளேன்.” என்றார்.