Back to Top

 WhatsApp இன் அந்தரங்கக் கொள்கைப் புதுப்பித்தலால் சீற்றம் மாற்று வழிகளை நாடுமாறு அழைக்கின்றார்  Viber பிரதம நிறைவேற்று அதிகாரி

WhatsApp இன் அந்தரங்கக் கொள்கைப் புதுப்பித்தலால் சீற்றம் மாற்று வழிகளை நாடுமாறு அழைக்கின்றார் Viber பிரதம நிறைவேற்று அதிகாரி

January 13, 2021  09:41 am

Bookmark and Share
இலவச மற்றும் எளிதான தகவல்தொடர்பாடலுக்கான உலகின் முன்னணி செயலிகளில் ஒன்றான Rakuten Viber வட்ஸ்அப் இன் பிந்திய அந்தரங்கக் கொள்கைப் புதுப்பித்தல் தனது சீற்றத்தை வெளியிட்டுள்ளது. கடந்த காலத்தில் வட்ஸ்அப் பயனர்கள் தமது இலக்கங்களை முகப்புத்தகத்தில் பகிர்வதைத் தவிர்த்திருந்தனர் எனினும் முன்னோக்கிச் செல்கையில் இது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பயனர்கள் 30 நாட்களுக்குள் இதற்கு இணங்க வேண்டும் இல்லாவிட்டால் அவர்களால் தமது கணக்கைப் பயன்படுத்த முடியாமல்போகும்.

வட்ஸ்அப் இன் இந்த வழுக்கும் நிலைமையப் புரிந்துகொள்ள 2018ஆம ஆண்டில் போர்ம்ஸ் சஞ்சிகையின் பார்மி ஒல்செனுக்கு வட்ஸ்அப் இணை நிறுவுனர் பிரெய்ன் ஆக்டனின் நேர்காணலுக்குச் செல்லுமாறு பரிந்துரைக்கின்றோம். இதில் அவர் தனது வெளியேற்றம் மற்றும் முகப்புத்தகங்களை அழித்துவிடுமாறு மக்களுக்கு வழங்கிய ஆலோசனைகள் பற்றிக் கலந்துரையாடியுள்ளார்: ´பாரிய நன்மைக்காக எமது பயனர்களின் அந்தரங்கத்தை நான் விற்றுவிட்டேன். நான் ஒரு தேர்வையும் ஒரு விட்டுக்கொடுப்பையும் செய்ததுடன் ஒவ்வொரு நாளும் அதனுடன் வாழ்கின்றேன்´ என்றார்.

இந்த சமீபத்திய புதுப்பித்தலுடன் முகப்புத்தகத்துடனான தனது தன்மயமாக்கலை வட்ஸ்அப் பூர்த்தி செய்தது. முகப்புத்தகம் மற்றும் வட்ஸ்அப் ஒன்றாகும்போது மெசஞ்சர் செயலிகளின் பயனர்கள் முன்னரைவிட பாரியளவில் பணமாக்கப்படுகின்றனர். மேலும் இது தனிப்பட்ட செய்திப் பரிமாற்றத்தைத் தேடுபவர்களுக்கு ஆபத்தானதாக இருக்கும்.

ஜனவரி 4 ஆம் திகதி வரையான புதுப்பித்தல் வரை வட்ஸ்அப்பின் ஒப்பந்த விதிமுறைகள் பின்வருமாறு குறிப்பிடுகின்றன:

- ´உங்கள் அந்தரங்கத்துக்கான மதிப்பு எமது DNA இல் குறியிடப்பட்டுள்ளது. நாங்கள் வட்ஸ்அப்பைத் தொடங்கியதிலிருந்து வலுவான அந்தரங்கக் கொள்கைகளை மனதில் கொண்டு எங்கள் சேவைகளை உருவாக்க நாம் விரும்புகின்றோம்.´

- ´இருப்பினும் உங்கள் வட்ஸ்அப் செய்திகள் ஏனையவர்கள் பார்வையிடுவதற்கு முகப்புத்தகத்தில் பகிரப்படாது. எங்கள் சேவைகளை இயக்குவதற்கும் வழங்குவதற்கும் எங்களுக்கு உதவுவதைத் தவிர வேறு எந்த நோக்கத்திற்காகவும் முகப்புத்தகம் உங்கள் வட்ஸ்அப் செய்திகளைப் பயன்படுத்தாது.´

இந்த இரண்டு அறிக்கைகளும் அகற்றப்பட்டதில் எந்த ஆச்சர்யமும் இல்லை.

இது வட்ஸ்அப் இன் தரவு அந்தரங்கத்துக்கு முற்றிலும் மாறான வகையில் அமைந்திருப்பதுடன் பயனர்களின் தரவுகளைப் பாதுகாப்பானது என்பதை உறுதிப்படுத்த முக்கிய அம்சங்களை செயற்படுத்தி வைபர் உதாரணமான முன்னிலையில் உள்ளது. அந்த அம்சங்கள் பின்வருமாறு,

* இலவச தனிப்பட்ட அழைப்புக்கள் மற்றும் அழைப்புககளுக்கு End-to-end encryption இயல்பாக அமைந்திருப்பதுடன் சிறப்பு அமைப்புக்கள் தேவையில்லை. இது தெளிவாகவும் எளிமையாகவும் உள்ளது. பங்கேற்பாளர்கள் தவிர வேறு யாரும் வைபர் உள்ளடங்களாக எவரும் உங்கள் அழைப்புக்கள் மற்றும் அரட்டைகளை அணுக முடியாது.

* வழங்கப்பட்ட குறுஞ்செய்திகள் வைபரால் சேமிக்கப்படுவதில்லை என்பதுடன் காப்புப் பிரதி இயல்பாக சேமிக்கப்படும் : பயனர்கள் தமது அறட்டைகளின் காப்புப் பிரதிகளை செயற்படுத்துவதாயின் க்ளவுட் காப்புப்பிரதியை தேர்வுசெய்யலாம். எனினும் பயனர்களின் செய்திகள் மற்றும் அழைப்புக்கள் தொடர்பான எந்த நகலையும் வைபர் வைத்திருக்காது.

* திரையின் அந்தரங்கம் : வைபர் உயர்மட்ட திரை அந்தரங்கத்தை வழங்குகிறது. இதன் ஊடாக பயனர்கள சுயமாக அழிக்கக்கூடிய செய்திகளை அரட்டையின் போது அனுப்ப அனுமதிப்பதுடன்ரூபவ் முழுமையான அறட்டைகளை மறைக்கவும்ரூபவ் இதற்காக தனியான குறியீட்டைப் பயன்படுத்தி மாத்திரம் பார்வையிடுவதற்கும் அனுமதிக்கிறது.

* பயனர்களின் எந்தவிதமான தரவுகளும் முகப்புத்தகத்துடன் பகிரப்படாது : முகப்புத்தகத்துடனான வணிக உறவுகளை வைபர் குறைத்துள்ளது. எந்தவொரு பயனர் தகவலும் (பயனரின் தொலைபேசி இலக்கம் மற்றும் தனிப்பட்ட தரவுகள்) முகப்பத்தகத்துடன் ஒருபோதும் பகிரப்படாது.

வட்ஸ்அப்பின் அந்தரங்கக் கொள்கையின் சமீபத்திய புதுப்பித்தல் அந்தரங்கம் என்ற வார்தையை சிரிக்கும் படியாக்கியுள்ளது. புதுப்பிப்பு வாட்ஸ்அப்பில் பயனர் அந்தரங்கம் எவ்வளவு அர்த்தமற்றது என்பதை நிரூபிப்பது மட்டுமல்லாமல் பயனர்களின் பதிவை அவமதிப்பதில் இது ஒரு புதிய பதிவு போல் தெரிகிறது இது எதிர்காலத்தில் தொடர்ந்து உடைந்து விடும் என்பதில் சந்தேகமில்லை. வைபரின் அந்தரங்கக் கொள்கை தொடர்பில் நான் முன்னெப்பொழுதையும் விட அதிகமாகப் பெருமையடைவதுடன் தங்களை பார்க்கும் அனைத்து ஆண்களையும் பெண்களையும் மிக உயர்ந்த ஏலதாரருக்கு விற்பதைவிட அவர்களின் செய்தியிடல் மற்றும் அழைப்புகளை வைபருக்கு நகர்த்துமாறு அழைக்கின்றேன்´ என வைபரின் பிரதம நிறைவேற்று அதிகாரி டிஜமெல் அகோவா கூறினார்.

Rakuten Viber பற்றி :

Rakuten Viber நாங்கள் மக்களை இணைக்கிறோம். அவர்கள் யார் அல்லது அவர்கள் எங்கிருந்து வந்தார்கள் என்பது முக்கியமல்ல. எங்கள் உலகளாவிய பயனர் தளம் ஒருவருக்கொருவர் அரட்டைகள் வீடியோ அழைப்புகள் குழு செய்தி அனுப்புதல் மற்றும் அவர்களுக்கு பிடித்த வர்த்தகநாமங்கள் மற்றும் பிரபலங்களுடன் புதுப்பிப்புகள் மற்றும் கலந்துரையாடல்கள் போன்ற பல அம்சங்களுக்கான அணுகலைக் கொண்டுள்ளது. எங்கள் பயனர்களின் உணர்ச்சிகளைப் பகிர்ந்து கொள்ள பாதுகாப்பான மற்றும் இலவச சூழல் இருப்பதை நாங்கள் உறுதிசெய்கிறோம்.

Rakuten Viber, Rakuten Inc இன் ஒரு பகுதியாகும். ஈ-வர்த்தகம் மற்றும் நிதிச் சேவையில் உலகின் முன்னணியாளராகும். இது FC Barcelona வின் அதிகாரப்பூர்வ தகவல் தொடர்பு சனல் என்பதுடன் Golden State Warriors அதிகாரப்பூர்வ உடனடி செய்தி மற்றும் அழைப்பு பயன்பாட்டுப் பங்காளராகும்.