கொழும்பில் 2 பகுதிகள் மீண்டும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படும் நிலையில்
January 13, 2021 12:44 pm
கொழும்பில் இரண்டு பகுதிகளை சேர்ந்த மக்கள் சுகாதார ஆலோசனைகளை கவனத்திற் கொள்ளாமல் தமது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக சிவில் உடைகளில் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ள பொலிஸார் அறிவித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
அதன் அடிப்படையில் கொழும்பு வடக்கு மற்றும் கொழும்பு மத்திய பகுதிகளைச் சேர்ந்த மக்கள் மீண்டும் சுகாதார ஆலோசனைகளை கவனத்திற் கொள்ளாமல் நடந்து கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதனால் அப்பகுதிகளில் மீண்டும் தொற்றாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அவ்வாறு ஏற்படும் சந்தர்ப்பத்தில் குறித்த பகுதிகளை மீண்டும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த வேண்டிய நிலை ஏற்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் அப்பகுதி மக்கள் அதிக அவதானத்துடன் செயற்படுமாறும் அவர் தெரிவித்துள்ளார்.