
நல்லிணக்கத்தை சிதைக்கும் வகையில் FBயில் பதிவு - நபருக்கு விளக்கமறியல்
January 13, 2021 01:21 pm
முகப்புத்தகத்தின் ஊடாக இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை சிதைக்கும் வகையில் பதிவுகளை பதிவிட்ட குற்றத்திற்காக, குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்ட நபரை இம்மாதம் 18 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பஸால் முஹம்மத் நிசார் எனும் வியாபாரி ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த நபர் கொழும்பு பிரதான நீதவான் முஹம்மத் மிஹார் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போதே அவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.