Back to Top

பொருளாதாரப் பங்களிப்பிலும் கொவிட்-19 நிவாரணத்திலும் சிறப்பான அடைவுகளுடன் தனது நூற்றாண்டு நிறைவைப் பூர்த்திசெய்தது கொமர்ஷல் வங்கி

பொருளாதாரப் பங்களிப்பிலும் கொவிட்-19 நிவாரணத்திலும் சிறப்பான அடைவுகளுடன் தனது நூற்றாண்டு நிறைவைப் பூர்த்திசெய்தது கொமர்ஷல் வங்கி

January 13, 2021  03:52 pm

Bookmark and Share
கொவிட்-19 பெருந்தொற்றின் தாக்கங்களை இலங்கையர்கள் சமாளிக்க உதவுவதற்காக கொமர்ஷல் வங்கியின் நூற்றாண்டு நிறைவு ஆண்டான 2020இல் புதிதாகக் கிட்டத்தட்ட 30 பில்லியன் ரூபாயை அவ்வங்கி சலுகைக் கடன்களாக வழங்கியதோடு நாட்டின் தனியார் வங்கிகளிடத்தில் அதிக கடன்களை வழங்கிய வங்கியாக ஆண்டை நிறைவுசெய்தது.

வங்கியால் வழங்கப்பட்ட அதிக அளவிலான சலுகைக் கடனானது கடன்களுக்கான மூலதனம் அல்லது வட்டித் தவணை நீடிப்பாக ஏற்கெனவே காணப்பட்ட 81,387 கடன்களுக்கு நிவாரணங்களை வங்கி வழங்கியிருந்தது. மூலதனமாக 443 பில்லியன் ரூபாய்க்கும் ஏற்கெனவே காணப்பட்ட கடனட்டை மீதிக்கும் இவ்வாறு நிவாரணம் வழங்கப்பட்டது என இவ்வாரத்தில் வங்கி வெளிப்படுத்தியது.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த கொமர்ஷல் வங்கியின் முகாமைத்துவப் பணிப்பாளர் திரு. எஸ். ரெங்கநாதன் நூறாண்டுகள் நீண்ட எமது வரலாற்றை நினைவுகூறுவதற்காக சமுதாய முன்னெடுப்புகள் பல சேர்ந்த மிகப்பெரிய திட்டமொன்றுடன் கொண்டாட்டமாக ஆண்டை நாம் ஆரம்பித்திருந்தோம். ஆனால் கொவிட்-19 பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களினதும் வணிகங்களினதும் தப்பிப் பிழைத்தலுக்கான உடனடியானதும் அத்தியாவசியமானதுமான பணியை நாம் ஆற்ற வேண்டுமென்பது தெரியவந்தது. கொவிட்-19 சம்பந்தப்பட்ட சலுகைக் கடன்களை வழங்குவதில் தனியார் வங்கிகளிடத்தில் முன்னிலை வகித்த நிலையில் ஆண்டை நிறைவுசெய்வது குறித்து நாம் பெருமையடைகிறோம். இந்தச் செயற்பாடு தொடர்ந்து நடைபெறுகிறது எனத் தெரிவித்தார்.

பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட வணிகங்களுக்குத் தொழிற்படு மூலதனக் கடன்களை வழங்குவதற்கான பல்வேறான நிவாரணத் திட்டங்களின் கீழ் டிசெம்பர் 30, 2020 வரை வங்கியால் கொவிட்-19 உதவிக் கடன்களாக 29.6 பில்லியன் ரூபாய் வழங்கப்பட்டது. மத்திய வங்கியால் பணிக்கப்பட்ட திட்டத்தின் கீழும் வங்கியின் சொந்த உதவித் திட்டங்களின் கீழும் இக்கடன்கள் வழங்கப்பட்டன. விசேடமான இரண்டு வேறு கடன் திட்டங்களையும் கொமர்ஷல் வங்கி அறிமுகப்படுத்தியிருந்தது.

கொவிட்-19 காரணமாகப் பாதிக்கப்பட்ட சிறிய - நடுத்தரத் தொழில்முயற்சிகளுக்காக ஒன்றும் பெருந்தொற்றுக் காரணமாகப் பாதிக்கப்பட்ட மைக்ரோ தொழில்முயற்சிகளுக்கு உதவுவதற்காக திரிஷக்தி கொவிட்-19 உதவிக் கடன் திட்டத்தையுமே வங்கி இவ்வாறு அறிமுகப்படுத்தியிருந்தது.

சிறிய - நடுத்தர வணிகங்களுக்கு உதவுவதற்காக 102 கடன்கள் மூலமாக 1.4 பில்லியன் ரூபாயையும் மைக்ரோ தொழில்முயற்சிகளுக்காக 313 கடன்கள் மூலமாக 34 மில்லியன் ரூபாயையும் வங்கி இக்கடன் திட்டங்கள் மூலமாக வழங்கியிருந்தது. இலங்கையின் தனியார் வங்கிகள் மத்தியில் 1.5 ட்ரில்லியன் ரூபாய் சொத்துக்கள், 1 ட்ரில்லியன் ரூபாய் வைப்புக்கள் 900 பில்லியன் ரூபாய் கடன்கள் ஆகிய மைல்கல்களை அடைந்த முதலாவது வங்கியாக 2020 ஆம் ஆண்டில் கொமர்ஷல் வங்கி மாறியிருந்தது. பல புதியதும் மேம்படுத்தப்பட்டதுமான வசதிகள் மும்மொழியில் பல அலைவரிசைகளை உள்ளடக்கிய தொடர்பாடல் நிலையம் இலங்கையில் முதன்முறையாக QR கொடுப்பனவு முறையைக் கொண்ட கடனட்டைகள் போன்றன உள்ளடங்கலாக தரமுயர்த்தப்பட்ட இணைய வங்கித் தளமான ´ComBank Digital´ உள்ளிட்ட பல புத்தாக்கமான பொருட்களையும் சேவைகளையும் வங்கி அறிமுகப்படுத்தியிருந்ததோடுரூபவ் இலங்கையில் முதன்முறையாக வட்ஸ்அப் வங்கிச் சேவையையும் அறிமுகப்படுத்தியிருந்தது.

கூட்டாண்மைச் சமூகப் பொறுப்பு முன்னெடுப்புகளில் தேசிய கொவிட்-19 சுகாதாரப் பராமரிப்பு மற்றும் சமூகப் பாதுகாப்பு நிதியத்துக்கு 10 மில்லியன் ரூபாயைக் கொமர்ஷல் வங்கி அன்பளித்திருந்ததோடு அத்தியாவசிய உணவு உற்பத்தியில் இலங்கையைத் தன்னிறைவு அடையச் செய்யும் நோக்கில் இலங்கை இராணுவம் மேற்கொள்ளும் துரு மித்துரு செயற்றிட்டத்துக்காக இணைந்து செயற்பட்டது. இலங்கையின் தகவல் தொழில்நுட்பக் கல்விக்கான தனது பங்களிப்புகளில் ஓர் அங்கமாக முழுமையான வசதிகளைக் கொண்ட 200ஆவது தகவல் தொழில்நுட்ப ஆய்வுகூடத்தை வங்கி அன்பளித்ததோடு 50 பாடசாலைகளில் இணைய நிரல் எழுதும் கழகங்களை (Coding Clubs) உருவாக்கியதோடு தனது 100ஆவது ஆண்டு நிறைவுக் கொண்டாட்டங்களின் ஓர் அங்கமாக 100 பாடசாலைகளில் 100 விஞ்ஞான தொழில்நுட்ப பொறியியல் கணித (Science Technology Engineering and Mathematics - STEM) வகுப்பறைகளை அமைத்துக் கொடுத்திருந்தது.

அதேபோல் தனது நூறாண்டுகள் நிறைவை முன்னிட்டு இலங்கையின் உலர் வலயத்திலுள்ள 100 ஹெக்டேயர் நிலப்பரப்பில் மீள்காடாக்கலை மேற்கொள்வதாகவும் வங்கி உறுதியளித்திருந்தது. இலங்கையில் அதிக விருதுகளை வென்ற நிதி நிறுவனமான கொமர்ஷல் வங்கி இலங்கையில் 268 கிளைகளைக் கொண்ட வலையமைப்பைக் கொண்டுள்ளது. வங்கியின் வெளிநாட்டுச் செயற்பாடுகள் 19 கிளைகளைக் கொண்டுள்ள பங்களாதேஷை உள்ளடக்குகின்றன. அதேபோல் மியான்மாரின் நேய்பியுடோவில் நுண் நிதி நிறுவனமொன்றையும் மாலைதீவில் முழுமையான செயற்பாடுகளைக் கொண்ட முதல் வரிசை வங்கியொன்றை பெரும்பான்மைப் பங்குரிமையோடு வங்கி கொண்டுள்ளது.

Most Viewed