
இலங்கையில் மேலும் 309 பேருக்கு கொரோனா
January 13, 2021 05:30 pm
இலங்கையில் மேலும் 309 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அதன்படி, நாட்டில் இதுவரை 49,848 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், இதுவரை 43,266 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.