
கொரோனா தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு
January 13, 2021 09:13 pm
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.
அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 247 ஆக அதிகரித்துள்ளது.
அதன்படி, பத்தரமுல்லை பிரதேசத்தை சேர்ந்த 66 வயதுடைய ஆண் ஒருவரும், கொழும்பு 15 பிரதேசத்தை சேர்ந்த 81 வயதுடைய ஆண் ஒருவரும் மற்றும் கொழும்பு 10 பிரதேசத்தை சேர்ந்த 89 வயதுடைய பெண் ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.