
வைத்தியர் பாதெனியவின் விருந்துபசாரத்திற்கு வந்த வைத்தியர் ஒருவருக்கு கொரோனா
January 14, 2021 08:45 pm
அரச வைத்திய அதிகாரி சங்கத்தின் தலைவர் விசேட நிபுணர் வைத்தியர் அனுருத்த பாதெனியவின் வீட்டில் இடம்பெற்ற விருந்துபசாரம் ஒன்றில் கலந்து கொண்ட வைத்தியர் ஒருவருக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த விருந்துபசாரத்தின் போது 03 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 20 பேர் கலந்து கொண்டுள்ள நிலையில் குறித்த வைத்தியரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த வைத்தியர் கொழும்பு ஐடிஎச் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதன்படி, வைத்தியர் அனுருத்த பாதெனியவை தனிமைப்படுத்துவதற்காக நேற்றிரவு (13) அவரின் வீட்டுக்கு சுகாதார பிரிவினர் சென்றுள்ளனர்.
இதன்போது, அவர் தெரணியகலை பிரதேசத்திற்கு புறப்பட்டுச் சென்றுள்ளதாக களனி சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் சந்திமா விக்ரமகே தெரிவித்தார்.