
முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி அபார வெற்றி!
January 18, 2021 10:51 am
இலங்கை மற்றும் சுற்றலா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில வெற்றிப் பெற்றுள்ளது.
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி தனது முதல் இன்னிங்சிற்காக 135 ஓட்டங்களையும், இரண்டாவது இன்னிங்சில 359 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டது.
இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 421 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்ட நிலையில் வெற்றிப் இலக்காக இங்கிலாந்து அணிக்கு 74 ஓட்டங்களை இலங்கை அணி நிர்ணயித்திருந்தது.
இதற்கமைய தனது இரண்டாவது இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.