
கொரோனா தொற்றுக்குள்ளான தயாசிறி வீடு திரும்பினார்
January 21, 2021 11:54 am
கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவர் தனது டுவிட்டர் கணக்கில் பதிவு ஒன்றை பதிவிட்டு இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்,
கொரோனா தொற்றுக்கு உள்ளான தான் வீடு திரும்பியுள்ளதாகவும் ஒரு வார காலம் வீட்டில் சுய தனிமைப்படுத்தலில் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் தனக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.