
அமெரிக்க புதிய ஜனாதிபதிக்கு பிரதமர் வாழ்த்து
January 21, 2021 01:18 pm
அமெரிக்க புதிய ஜனாதிபதியாக நேற்றைய தினம் பதவியேற்ற ஜோ பைடன் மற்றும் துணை ஜனாதிபதியாக பதவியேற்ற கமலா ஹாரிஸ் ஆகியோருக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
தனது ட்விட்டர் வலைத்தளத்தில் பதிவொன்றை மேற்கொண்ட அவர் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
அத்துடன் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்த உங்களுடன் இணைந்து பணியாற்ற நாம் எதிர்பார்த்துள்ளதாகவும் பிரதமர் கூறியுள்ளார்.