
விபத்தில் ஒருவர் பலி - CCTV காணொளி
January 21, 2021 01:42 pm
பட்டபொல - குருந்துகஹ வீதியில் இடம்பெற்ற விபத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிள் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீதியில் சரிந்து எதிரில் வந்த லொறியின் சில்லில் சிக்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்தில் பட்டபொல பகுதியை சேர்ந்த 30 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்து இடம்பெற்ற விதம் அருகில் இருந்த சிசிரிவியில் பதிவாகியிருந்தது.