Back to Top

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு 20 விமானங்கள் வருகை

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு 20 விமானங்கள் வருகை

January 21, 2021  02:03 pm

Bookmark and Share
வணிக விமானங்களுக்காக கட்டுநாயக்க விமான நிலையம் திறக்கப்பட்டதையடுத்து இன்று காலை 8.30 மணி வரையில் 20 விமானங்கள் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த காலப்பகுதியில் வருகை தந்த 8 விமானங்கள் ஊடாக 213 பேர் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் சௌதி அரேபியாவில் இருந்து 76 பேர், ஓமானில் இருந்து 50 பேர் மற்றும் தென் கொரியாவில் இருந்து 13 பேர் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை 12 விமானங்கள் ஊடாக 542 பேர் வௌிநாடுகளுக்கு சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.