திருகோணமலையில் மஜாஜ் நிலையம் என்ற போர்வையில் விபச்சார விடுதி நடாத்தி வந்த நான்கு பேரை அடுத்த மாதம் 1 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் சமிலா குமாரி ரத்நாயக்க இன்று (28) உத்தரவிட்டார்.
கல்கமுவ, தம்புள்ளை மற்றும் மாத்தளை பகுதியைச் சேர்ந்த 31, 34 மற்றும் 36 வயதுடைய மூன்று பெண்களும் ஆண் ஒருவருமே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் திருகோணமலை மத்திய வீதிப் பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றின் எதிரே மஜாஜ் நிலையம் என்ற பெயரில் விபச்சார விடுதி நடாத்துவதாக திருகோணமலை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கைது செய்து திருகோணமலை நீதிமன்ற நீதிவான் வாசஸ்தலத்தில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
குறித்த விடுதிக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
-திருகோணமலை நிருபர் பாருக்-