
ஆயுர்வேத வைத்தியசாலைகளில் பதிவாகும் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
January 28, 2021 03:37 pm
ஆயுர்வேத வைத்தியசாலைகளில் பதிவாகும் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அரசாங்க ஆயுர்வேத வைத்திய அதிகாரிகளின் சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் விசேட மருத்து சிகிச்சை முறையொன்று செயற்படுத்தப்பட்டுள்ளதாக அதன் இணை செயலாளர் வைத்தியர் உதார அத்தபத்து தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.