Back to Top

கிழக்கு முனையம் தொடர்பில் கையெழுத்து வேட்டை

கிழக்கு முனையம் தொடர்பில் கையெழுத்து வேட்டை

January 28, 2021  03:55 pm

Bookmark and Share
கொழும்பு கிழக்கு முனையத்தின் எந்தவொரு பகுதியும் முதலீட்டாளர்களுக்கு வழங்கப்படாது என ஜனாதிபதி உடனடியாக நாட்டு மக்களுக்கு உறுதியளிக்க வேண்டும் என்ற மக்கள் மனுவொன்றுக்கு கைச்சாத்திடும் நடவடிக்கை காலியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தேசிய தொழிற்சங்க மத்திய நிலையத்தினால் இது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எதிர்வரும் சில தினங்களில் நாடு பூராகவும் இது முன்னெடுக்கப்படும் என அகில இலங்கை துறைமுக பொது ஊழியர் சங்க காலி கிளையின் செயலாளர் சிசிர சமன் கீர்த்தி தெரிவித்தார்.

மேலும், கிழக்கு முனையத்தை துறைமுக அதிகார சபைக்கு வழங்குமாறும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, கிழக்கு முனையத்தை முழுமையாக அரசாங்கம் பராமரித்துச் செல்ல வேண்டும் என வலியுறுத்தி நாளை (29) முதல் தொழிற்சங்க நடவடிக்கையொன்றை முன்னெடுக்க துறைமுக தொழிற்சங்கம் தீர்மானித்துள்ளது.