
தேசிய அமைப்பாளர் பதவியை ஏற்காமைக்கான காரணம்
January 28, 2021 04:17 pm
ஐக்கிய தேசிய கட்சியினுள் தலைமைத்துவம் மற்றும் எதிர்பார்க்கப்பட்ட மறுசீரமைப்பு மேற்கொள்ளப்படாமை காரணமாகவே தான் கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவியை ஏற்க வில்லை என நவீன் திஸாநாயக்க தெரிவித்தார்.
ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தவிசாளராக நியமிக்கப்பட்ட அர்ஜுன ரணதுங்கவுடன் இணைந்து இன்று (28) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் இதனை தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், ´நான் இன்னும் ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினராகும். கட்சியில் இருந்து விலக மாட்டேன். கடந்த தினம் ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய அமைப்பாளராக என்னை நியமித்த போதும் நான் அதை ஏற்கவில்லை. கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் எதிர்பார்த்த அளவில் இடம்பெறாமையே அதற்கு காரணம்´. என்றார்.