நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் பஸ் ஒன்று விபத்துக்குள்ளானதில் சாரதி உட்பட 13 பேர் காயமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர்.
பிபில பகுதியிலிருந்து தலவாக்கலை பகுதிக்கு மரண வீடொன்றுக்கு வந்த பஸ் வண்டியே இன்று (22) பிற்பகல் ரதல்ல குறுக்கு வீதியில் கட்டுப்பாட்டை மீறி குடைசாய்ந்துள்ளது
18 பேர் பயணித்த குறித்த பஸ்ஸில் பயணித்துள்ள நிலையில் சாரதி உட்பட 13 பேர் காயமடைந்து நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
-மலையக நிருபர் சதீஸ்குமார்-